B.Ed படித்த பிறகு கூடுதலாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2021

B.Ed படித்த பிறகு கூடுதலாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

 பி.எட் படித்த பின்பு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பரிதவிக்கும் சூழல் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான தேர்வுகள் நவம்பர் 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 17-ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்போர் முதுநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும்.


இதில், இளங்கலையில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்த பிறகு, கூடுதலாக இளங்கலை அல்லது முதுகலை படித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததால், தகுதியுள்ள பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறும்போது, “நான் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு மேலாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் விண்ணப்பிக்க முடியவில்லை. என்னைப் போல பலரும்விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். 2011-ம் ஆண்டு பிஎட்  முடித்தேன். 2012-ல் கூடுதலாக பி.ஏ. வரலாறும், 2017-ம் ஆண்டு எம்.ஏ வரலாறும் படித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இணையத்தில் தொடர்ந்து அறிவிப்பு வருகிறது.

பிஎட் படிப்பு என்பது பொதுவானது. என்னைப் போல, ஒரு பட்டப்படிப்புக்குப் பின்னர் பி.எட் முடித்துவிட்டு வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த முறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்தக் குழப்பங்கள் இல்லை. இது தொடர்பாக தேர்வு வாரியத்தை தொடர்புகொண்டால், அவர்கள் இணையத்தில் உள்ள பிரச்சினையை விரைவில் சரிசெய்கிறோம் என்றனர். ஆனால் இன்று வரை பிரச்சினை களையப்படாததால், விண்ணப்பிக்க முடியவில்லை” என்றார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் என்.முருகேசன் கூறும்போது, “தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள பலரும், இந்தக் குழப்பத்தால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வரும் நாட்களில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என அரசு விடுமுறை நாட்கள் வருவதால் விண்ணப்பிக்க இயலாது. எனவே, உடனடியாக இப்பிரச்சினையைக் களைந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி கூறும்போது, “இந்தக் குளறுபடியால் பலருடைய வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றார்.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொண்டால், அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.

34 comments:

  1. B.SC COMpUTER SCIENCE முடித்த பிறகு B.ed படிக்க முடியுமா?..M.sc படித்த பிறகு தானே B.ed படிக்க முடியும்... 2012 ல் பி.ஏ வரலாறும் 2017 ல் எம்.ஏ வரலாறும் படித்து இருக்கிறார். .. Bed தகுதியை ஏற்றுக் கொள்ள முடியுமா?..நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. B.Sc(CS) is eligible for do B.Ed I am Assistant Professor in B.Ed College Call Me Cell:9789380053

      Delete
    2. I completed my B.Sc.,B. Ed.,
      Qualified in CTET and TNTET.oru central government school LA contract basis vacancy ku apply pannen. Enoda application vanga matenu sollitanga. Because maths teacher kandipa physics ah avangaloda B. SC LA elective subject ah padichurukanumam.Enaku elective subjects computer science and statistics.Ithu varaikum B. Ed admission la illana TET exam announcement la ipdi ethavathu pathurukingala. Na B. Ed padikum Pothu ean itha sollala. TET eluthum pothum sollala. Ithanala intha year CTET announcement la puthusa oru notifications elgiblity ku potrukanga. Athula KVS or Navodhaya schools solra eligibility satisfy pannanumnu sollirukanga. Or state government follow panra rules follow pannalamnu sollirukanga.
      Ithula enana KVS and Navodhaya schools LA B. SC (Physics) B. Ed padichavanga eligible illa. B. Sc(chemistry) LA biology thavira vera elective choose pannuvanga eligible illa. Athellam ithu varaikum yarathu pathingala. Yatlrathu physics teachers ctet pass pannirukingala. Ena panalam ithuku. Innum neraya questions iruku Enaku.kidly suggest your opinions.

      Delete
    3. Na ctet paper1 clear panniten age 30 varaikum than relaxation 3 years enaku 33 mudinchuruchu vera ethuvathu relaxation kidaikuma

      Delete
    4. He is not eligible . His B.ed certificate is for teaching computer science. he has to do m.sc computer science or another b.ed in history. B.ed is for the major eligibility requirement for teaching. History cannot be validated for pg trb

      Delete
  2. M.sc chemistry tamil medium is not available throughout tamilnadu. Chemistry candidates how will come under PSTM category.

    ReplyDelete
    Replies
    1. U r not eligible for pstm

      Delete
    2. B Ed major computer science study pannitu eppati neenga history teacher ku apply panna mutiyum nanba

      Delete
  3. B.A வரலாறு காலம் 2012முதல் 2015நீங்க

    ReplyDelete
  4. தங்களுக்குத் தெரிந்த தகவல்களை எனக்கு தெரியப்படுத்தவும்.
    நன்றி

    அதாவது ஒரு Bsc Maths பாடத்திற்கு பிஎட் படித்த பின்பு வேறு அதாவது தமிழ் பாடத்தில் இளங்கலை மூன்றாண்டுகள் மற்றும் தமிழ் பாடத்தில் முதுகலை இரண்டு ஆண்டுகள் முடித்தபின்பு ஏற்கனவே முடித்த b.ed என்ற பட்டத்தை இந்தத் தமிழ் பாடத்திற்கு பயன்படுத்த முடியுமா? இதற்கான GO அதாவது அரசாணை ஏதாவது இருக்கிறதா? அல்லது இவ்வாறு இதே முறையைப் பின்பற்றி வேறு யாராவது பணியில் சேர்ந்துள்ளனரா? இம்முறை பின்பற்றி விண்ணப்பிக்க இயலுமா ?அரசுப்பணியில் சேர இயலுமா? என்ற பல்வேறு குழப்பங்கள் உடன் இருக்கும் நான் எனக்கு ஏதாவது தகவல் இருந்தால் பகிரவும்.
    நன்றி வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Endha paadathirkku vinnapikireergalo, Andha paadathil,UG Panna pinbu B.ED pannirukka veandum

      Delete
    2. B.Ed-இல் 2 விருப்ப பாடம் உள்ளது. ஒன்று முதன்மை பாடம், இரண்டாவது தமிழ், ஆங்கிலம், இன்னும் பிற. இவற்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் எடுத்து B.Ed முடித்து பிறகு B.A., Tamil or B.A., English முடித்தால் தகுதி உண்டா...

      Delete
    3. 2nd option is not English. As per ncte norms we can choose any two of the subjects. But most of us not aware of this. Kindly go through the G. O. Niraya vishayangal theriyamale irukom. Rombave varuthama iruku

      Delete
  5. தொடர்பு கொள்ள வேண்டிய எண் 6383161694.

    ReplyDelete
  6. Yuvaraj sir Enakkum edthey problem sir...plz unga num send pannuggu sir

    ReplyDelete
  7. B.lit தமிழ் apply panna mutuala

    ReplyDelete
  8. Bed படித்த பின் எந்த பட்டம் பெற்றாழும் ஆசிரியர் பணிக்கு தகுதிதான்

    ReplyDelete
  9. அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை முதுநிலை மற்றும் பிஎட் முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக ஒரு ஆண்டு ஆங்கிலம் படித்தனர் காரணம் ஆங்கில ஆசிரியர் பணிஅதிகம் என்பதால் இந்த முறைக்கு நீதிமன்றம் தடை விதித்தது இப்போது இளநிலை முதுநிலைBed முடித்து விட்டு கூடுதலாக இளநிலை முதுநிலை என்று படிக்கும் போது சிக்கல் உள்ளது என்றால் முறையான கல்விமுறை தான் கணினி மென்பொருளில் பதிவேற்றம் செய்ய பட்டிருக்கும் உதாரணமாக 10 12 UG PG bed or10 12 UG bed pg இதை விடுத்து 10 12 UG BEd UG PG எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.2015முதல் பிஎட் படிப்பில் இரண்டு வருடங்களிலும் இளநிலை முதுநிலையில் எந்த பாடம் படித்தார்களோ அந்த பாடம் தான் ஒருதாளாக உள்ளது.இப்படி வருபவர்களை தடுக்க . அறிவியல் பாட ஆசிரியர் பணிக்கு படித்து விட்டு கலை பாட ஆசிரியர் பணிக்கு வந்தால் கலை பாட ஆசிரியர்கள் அறிவியல் பாடங்களை மீண்டும் படிக்கமுடியுமா முடியாது காரணம் தகுதி இல்லைஎன்பது ஒருபுறம் இருக்க அறிவியல் பாடங்கள் கடினம் இவர்கள் 10 படித்தவுடன் கலைபிரிவு ஏன் எடுத்து படிக்கவில்லை இப்போது இதுபோல் வருபவர்கள் தேர்வாகும் போது அவர்களால் கலைபாட ஆசிரியர்களுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் உதாரணமாக கடினமான அறிவியல் பிரிவுஆசிரியர்களுக்கு வரலாறு என்பது எளிதாக இருக்கும் இவர்களால் நடுத்தரமான கலைபாட ஆசிரியர்களுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.முதலிலேயே சிந்தனை செய்து பாடப்பிரிவுகள் தேர்வு செய்து படிக்கவும் இடையில் வந்து அடுத்தவர்கள் பாடப்பிரிவுகளில் தலையிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Neenga solratha Na accept panren. Ana B. SC Ed, B. A Ed nu course iruku.Athu padichutu PG panravanga PG assistant aha mudiyatha. Ug oru major laum pG oru major LA I'm iruntha cross major nu solranga. TN LA B. Ed padikurathula 70% people B. Ed pannitu pg padikuranga. So neenga solra Mathiri 10th , 12, UG, PG, B. Ed nu G.O ethum Illa. Atha pathi ethum theliva kodukala

      Delete
    2. நான் அதை சொல்லவில்லை இது போன்ற படிப்புகளை படிக்கும் போது மற்றவர்கள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கும் போது ஒருவருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமாகவும் அமைகிறது பாதகமானவர்களுக்கு அவர்கள் படித்த கூடுதல் பட்டத்திற்கான கால விரயம் பண விரயம் ஏற்படுகிறது உதாரணமாக ஒரு ஆண்டு பட்டம் கிராஸ் மேஜர் போன்றவை இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் பணிகிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும் . முதுகலை வரலாறு ஆசிரியர் நியமனத்தில் பதவி உயர்வில் இவ்வாறு கிரஸ்மேஜர் பிரச்சினையால் பதவிஉயர்வு சில இப்பாடல் தில் வழங்கபடவில்லை.நீதிமன்ற உத்தரவுமூலம் இளநிலை முதுநிலை இருநிலைகளிலும் வரலாறு பாடம்படித்தவருக்கே வரலாறுமுதுநிலை ஆசிரியராக பதவிஉயர்வு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.இன்று இருப்பது நாளைக்கு இருக்குமா என நினைக்கமுடியாது.பாதிக்கப்பட்டோர்நீதிமன்றம் போனால் அவ்வளவு தான் இதை மாற்றி விட்டு வேறு முறைவரும்.அதனால் முறையான முறையில் இருந்தால் எதற்கும் பயப்படதேவையில்லை காலவிரயம் பணவிரயம் ஆகாது.இது பொதுவான கருத்துக்களே.மூன்றாம் ஆண்டு பட்டம் இரண்டு ஆண்டுகள் முதுகலை பட்டம் என்பதால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

      Delete
  10. PG TRB க்கு விண்ணப்பிக்க பி.எட் படித்த பிறகு படித்த UG&PG degree ஐ திங்கட்கிழமை முதல் பதிவு செய்து கொள்ளலாம்.தொலைபேசி வழி TRB தகவல்

    ReplyDelete
  11. Bed தாங்கள் படித்தது computer science க்கு. ஆனால் தாங்கள் 2012 ல் வரலாறு இளநிலை மற்றும் 2017 முதுகலை வரலாறு படித்தேன் என்று கூறியுள்ளீர்கள். வரலாறுக்கான bed படித்திருக்க வேண்டும். Ug history, pg history பன்னுனிங்க ஆனால் bed computer scienceக்கு முடித்தால் எப்படி ஏற்கபடும். Computer science bedபன்னுனப்ப major computer science தானே வரும்.

    ReplyDelete
    Replies
    1. 2015 வரை ஒரு ஆண்டு பிஎட் இருந்த போது தங்கள் பாடம் ஒரு தாளும் விருப்ப பாடங்களாக Tamil or Englishதேர்வு செய்யும்முறைஇருந்தது (Except Tamil English major bed) தற்போது இல்லை எந்த பாடத்தில்Bed படிக்கின்றார்களோ அந்த பாடம் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு தாளாக மொத்தம் இரண்டு தாள்தேர்வுஎழுதவேண்டும்

      Delete
  12. B.Ed பட்டம் எல்லா பாடத்துக்கும் பொதுவானது மேலும் இது மாணவ ஆசிரிய உளவியல் பாடம் எனவே எல்லா பாடத்துக்கும் பொதுவானே தே

    ReplyDelete
  13. அவர் computer science க்கு BEd படித்துள்ளார். எப்படி historyku apply பன்ன முடியும்?. Bed முடித்தவுடன் வரலாறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

    ReplyDelete
  14. Bed after ug ,pg studied please contact 8012445419

    ReplyDelete
  15. M.A தமிழ் ஓராண்டு படித்துமுடித்த ஒருவர். M.A இடைநிற்றலுக்கு பிறகு B.Ed படித்து முடிக்கிறார். பிறகு M.A தமிழ் இரண்டாமாண்டை முடிக்கிறார். TRB C.V இல் பிரச்சனை வருமா? இது தொடர்பான அரசாணை எண் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  16. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி நான் பெற்ற பதில்...B.Ed ஒரு முறை பயின்றால் போதுமானது...TET தேர்வு எழுதலாம்...என் நண்பர் ஒருவர் இதே போல் computer science, B.Ed முடித்து பின்னர் B.A history TET 2019 தேர்வில் தேர்ச்சி பெற்று ...CV சென்று வந்தார்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி