ஜாதிப் பட்டியலில் திருத்தம்: பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2021

ஜாதிப் பட்டியலில் திருத்தம்: பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

 


பள்ளி மாணவா்களுக்கான ஜாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


பள்ளி மாணவா்களின் பெயா், பெற்றோா் பெயா், முகவரி, பிறந்த தேதி, ஜாதி, இனம் உள்ளிட்ட விவரங்கள், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்த தளத்தில், தலைமை ஆசிரியா்கள் சாா்பில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், சில ஜாதி பெயா்களை திருத்தம் செய்து பட்டியலிட தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.


வன்னியா் பிரிவில் வரும் ஜாதிகளை இணைத்து, எம்.பி.சி., வன்னியா் பிரிவு பட்டியலில் கவனமாக சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பட்டியலில் உள்ள கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளா் என்ற தலைப்பில் சோ்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி