“ Construction with Make Your Own Lab " - ஆசிரியர்களுக்கான பயிற்சி - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2021

“ Construction with Make Your Own Lab " - ஆசிரியர்களுக்கான பயிற்சி - CEO செயல்முறைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் - அகஸ்தியா திட்டம் செயல்படும் – அரசு பள்ளியில் பணிபுரியும் பள்ளிக்கு ஒரு அறிவியல் / கணிதம் ஆசிரியர் “ Construction with Make Your Own Lab " எனும் ஆசிரியர் பயிற்சி அளிப்பது - ஏற்கனவே இணையவழியில் அகஸ்தியா மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு குப்பம் ( ஆந்திரா பாநிலம் ) வளாகத்தில் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து பயிற்சியில் பங்கு பெற அறிவுறுத்துதல் - தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் , அரசு அனுமதியோடும் பார்வையில் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பயிற்சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , மாணவர்கள் நலன் கருதி அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் Titan இணைந்து நடத்தும் Mobile Science Lab and Science Centre ஆகிய திட்டங்களை செயல்படுத்த பள்ளிகளிலிருந்து 6 - ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை அறிவியல் / கணிதம் பாடம் போதிக்கும் பள்ளிக்கு ஒரு அறிவியல் / கணிதம் ஆசிரியருக்கு " Construction with Make Your Own Lab " நான்கு நாட்கள் Workshop பயிற்சியினை ஏற்கனவே இணையவழியில் அகஸ்தியா மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அகஸ்தியா சார்பாக பயிற்சி குப்பம் ( ஆந்திரா மாநிலம் ) வளாகத்தில் 26.10.2021 முதல் 29.10.2021 வரை நடைபெற உள்ளதால் 25.10.2021 பி.ய முதல் பணியிலிருந்து விடுவித்து பயிற்சியில் கலந்து கொள்ள தக்க அறிவுரைகள் வழங்குமாறு கிருஷ்ணகிரி / ஒசூர் / மத்தூர் / தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / நடுநிலைப்பள்ளி / அரசு உதவிப்பெறும் பள்ளி / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் உங்களின் சந்தேகங்களுக்கு அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது . 


குறிப்பு

• இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு உணவு / தங்கும் வசதி செய்யப்பட்டுள்து . இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 25.10.2021 அன்று மாலை 04.00 மணியளவில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் அனைவரும் குப்பம் செல்வதற்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது . 

* இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின் பொருட்டு கொரோனா வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறத்தப்படுகிறது . 


தொடர்புகொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பாளர்கள் :

1. திருமதி.புஷ்பா ( 9513300669 ) 

2. செல்வி.திபீகா ( 9483630088 ) 

3. திரு - மூவேந்தன் ( 6382607814,8754737346 ) 


இணைப்பு : இணையவழியில் அகஸ்தியா மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி