1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை - மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - அரசாணை வெளியீடு!! - kalviseithi

Oct 23, 2021

1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை - மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - அரசாணை வெளியீடு!!

 

01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை எனவும் மழலையர் பள்ளிகள்  திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



 தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.


இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

➤ Based on the suggestions made by the Educationist and parents , classes for 9th , 10th 11th and 12th standards in Schools and Colleges are already permitted to function . Similarly , taking into account the views expressed by the Medical Experts , Educationist and Parents and considering the psychological well - being of the students and to avoid huge learning gap in the society and in the interest of students ' education , the direct classes for 1st to 8th standards shall be permitted in all the schools with effect from 01.11.2021 by duly following the appropriate standard operating procedures. 

The School Education Department shall take necessary preparatory action and prescribe appropriate standard operating procedures for conducting classes regularly.


GO NO : 658 , DATE : 20.10.2021 - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி