ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2021

ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

தமிழகத்தில் ரூ.169 கோடி மதிப்பீட்டில் புதிய அரசுப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறை சார்பில் 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள் 1,05,168 பேருக்குத் தமிழக முதல்வர் ரூ.196.91 கோடி ஊக்கத் தொகையை வழங்கும் பணியை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

10 comments:

 1. கட்டிடங்களைத் திறந்து வைத்தீர்கள் சரி. ... போதிய ஆசிரியர்களை நிரப்பினீர்களா ? ஆசிரியர் தகுதித்தேர்வு என்கிற மாபெரும் துயரத்தை வசதியாக மறந்து விட்டீர்களா ?

  ReplyDelete
 2. Monday tet ku selection list vida poranga... So ellorum happy ah irunga frds....

  ReplyDelete
  Replies
  1. Endha basis la select panna poranga???

   Delete
  2. Avanthan fraud viduramnu atha numpi kekura

   Delete
 3. 90% tet mark 10% employment seniority. 13 17 19 mix panni thaan....

  ReplyDelete
  Replies
  1. 3 batch um mix panni potta okay. 13 ku mattum posting pottangana stay order vaanki posting poduvathai stop pannuvom 17 19 batch candidates.

   Delete
 4. Sir ithu unmaya.. what abt the vacant sir...

  ReplyDelete
 5. 149.Competitive exam g.o irukum pothu epadi selection list mr.unknown sir..

  ReplyDelete
 6. இன்னுமா நம்புரீங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி