அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு! - kalviseithi

Nov 25, 2021

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!


பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்த பின்னர் , அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது : 

( i ) . 2021-2022ஆம் கல்வியாண்டில் , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களான தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் . வரலாறு , புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் காலியாகவுள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை கொண்ட குழு மூலமாக , ஒப்பந்த அடிப்படையில் ( Contract Basis ) தற்காலிகமாக நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( ii ) இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை , அவர்கள் நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மற்றும் பதவி உயர்வு மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியதோ அது வரையில் மட்டும் நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( iii ) . இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில்    ( Contract Basis ) தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .10,000 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் . 

( iv ) . இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மூலம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது . 

இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் செலவினம் ( 2774 x ரூ .10,000 × 5 மாதங்கள் ) ரூ .13,87,00,000 / -ஐ ரூபாய் பதிமூன்று கோடியே எண்பத்தேழு இலட்சம் மட்டும் ) நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணை வழங்கப்படுகிறது .


அரசாணை பதிவிறக்கம் செய்திட

Touch Here to download

38 comments:

 1. இந்தக் கல்வியாண்டிலும் கானலாகிப் போன கலந்தாய்வுக் கனவு.....

  ReplyDelete
 2. வருட துவக்கத்திலிருந்து விரைவில் விரைவில் என்று சொல்லியே வருடத்தை ஓட்டி கொண்டுவரவும் ஒரு திறமை வேண்டும்....வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரே....

  ReplyDelete
 3. Trb exam மற்றும் transfer counseling இரண்டும் அம்பேல்......  போங்கடா.... நீங்களும் உங்க அரசாங்கமும்.....  ReplyDelete
  Replies
  1. தேர்வுக்கு ஊதிட்டாங்க சங்கு...

   Delete
 4. https://www.kalviseithi.net/2020/12/breaking-news.html படிச்சு பாருங்க, அண்ணனோட நியூஸ... அப்பாலிக்கா தம்பிய கயுவி கயுவி ஊத்தலாம்.....

  ReplyDelete
 5. DutyPay=36900
  DA (36900*0.17)=6273
  MA=300
  Normal HRA= 600
  Total=44073
  44,073×2,774=12,22,58,502(one month)
  But
  2774×10000=2,77,40000


  94,518,502 (gain to government per month)
  Five months total 13.87 cr only
  One month equal to five months that's all your honour ........

  ReplyDelete
  Replies
  1. இந்த லாபம் governmentக்கு இல்லை.. கல்வி அமைச்சருக்கு என்பதை புரிந்தால் சரி...

   பத்தாண்டுகால பசி என்னவெல்லாம் செய்யும் பாருங்கள்.....

   Delete
 6. மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு ஆனால் தேர்வு நடப்பது உறுதி டிசம்பர் மாதம் இறுதியில் தேர்வு வரும்

  ReplyDelete
  Replies
  1. நாமம் தான் இனி டிசம்பர் ஆவது.... ஆவது இ௫க்கிர வழக்க முடிக்க ஒ௫வ௫டம் ஆகும்

   Delete
  2. சார் எப்படியோ கோச்சிங் சென்டருக்கும் பிரவுசிங் சென்டருக்கும் டி ஆர் பி -ஆல் லாபம் நமக்கு நாமம்

   Delete
  3. அடுத்தது பதிவு மூப்புதான் சார் தேர்வு கிடையாது உங்களுக்கு சந்தேகம் இருந்தா டி ஆர் பி ஆன்லைன் விண்ணப்பத்தில் இறுதி வாசகத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை நல்லா படிச்சு பாருங்க புரியும்

   Delete
  4. பைத்தியமா இவன்.
   😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁தேர்வு நடத்த தடை இல்லை. தேர்வு நடைபெறும். முடிவு தாமதமாகும். வன்னியருக்கு தனி Question papera கொடுக்க போறாங்க.
   😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
 7. Dear respectable government why u didn't think or talk about 2013 batch passed candidates. They are waiting 8 yrs to to give chances to prove & light thieir life's

  ReplyDelete
  Replies
  1. How many member are in tet paper 1 all are get job aha?

   Delete
  2. adei 2013 la 20000 vacancies ku mela fill pannitanga... ippo enga masurulaya varum.....

   Delete
 8. Computer science கிடையாதா?

  ReplyDelete
  Replies
  1. எந்த அரசும் கணினி அறிவியலை ஒரு பாட பிரிவாக கூட கருதுவது இல்லை ஆனால் பள்ளியின் அனைத்து நிர்வாக சம்பந்தப்பட்ட தபால்கள்.Hi-Tech முதலியவற்றுக்கு மட்டும் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் -ஒரு அரசு பள்ளி கணினி ஆசிரியராக

   Delete
  2. rajkumar sir, atleast u r getting some job right. its better than private school cs teacher job..

   Delete
 9. தேர்வு முடிவு தாமதமாகலாம்.
  தேர்வு டிசம்பர் இறுதியில் நடைபெறும்.

  ReplyDelete
  Replies
  1. ௭ப்படி நடக்கும் வழக்குகள் தான் இ௫க்கே... வேர வேலை இ௫ந்தா பா௫

   Delete  2. டிசம்பர்ல நடந்தா சந்தோசம்.
   இரண்டு அல்லது மூன்று மாதம் தள்ளி போனால் மிகவும் சந்தோசம்.நல்லா படிக்கலாம்ல

   இப்படி தேர்வு வராதன்னு நெனச்சிட்டு முட்டு சந்துல நின்னுட்டு இருந்தா இருந்தால் முன்னேற முடியாது தலைவரே..... 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
  3. நீ படிச்சு தான் கிழிச்சிட்டயே தெரியலையாபோன தேர்வில் 7கூட ௭டுக்காதவன்தானே நீ....

   Delete
 10. Appo, 560 postings increase aaguthu nnu sollunga....... nallathu...

  ReplyDelete
 11. கல்வி செய்தி கடைசி செய்தி....Tooo late

  ReplyDelete
 12. கல்வி செய்தி கடைசி செய்தி Tooo late...

  ReplyDelete
 13. Now a days computer occupied in all over the field why should not given the priority for the computer job? Started from the grocery market to IT sector computer occupied the place. Why we did not consider the govt school children to teach computer now a days

  ReplyDelete
 14. Ellarukkum Theliva Naamaththapotuthu pottanga

  ReplyDelete
 15. TRB தேர்வு நடக்குமா ? நடக்காதா?

  ReplyDelete
 16. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் நிர்ணயதபட்டது அதனால் 500 பணியிடங்கள் அதிகமாக உள்ளது தேர்வு தள்ளிப் போனால் புதிய வர்களுக்கும்வாய்ப்பு தரணும்

  ReplyDelete
  Replies
  1. புரியல Sir. எப்படி 500 அதிகம் என்கீறீர்கள்

   Delete
  2. முதலில் விளம்பரங்கள் வந்தது 2207 இப்போது 2774 இப்போது 567 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் பணியிடங்கள் அதிகரித்தால் ஒருவேளை தேர்வு மார்ச் மாதம் இறுதியில் நடந்தால் நவம்பர் 14ம்தேதிக்குபிறகு பிஎட் மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.இல்லை தேர்வினை விரைவாக நடத்த வேண்டும்.

   Delete
  3. விவரம் ௮றியாமல் கூற வேண்டாம்.. 1954இடங்களுக்குமட்டுமே தேர்வு நடத்த ஆணை

   Delete
 17. Stalin ayya dhane consolidated payment yaraiyum appointment panna kudathu sonnar ,atchi ku varuvatharku ku munnadi

  ReplyDelete
 18. எப்டியோ பரபரப்பாவே வச்சிருக்கிங்க....

  ReplyDelete
 19. Come, let us file a case in court.

  ReplyDelete
 20. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
  PG TRB - தமிழ் & Education
  New Batch starts on 05/12/2021
  Near 4 Road circle, Aavin opp
  Dharmapuri
  Contact - 9344035171

  Tamil materials - 2000 pages
  Education materials - 400 pages

  Test Batch also going on
  1.Content test
  2.unit test
  3.category test
  4.Spilt test
  5.whole test

  ReplyDelete
 21. POLYTECHNIC trb friends....heavy rain
  Cm cell ku request Pana kandipa post pone panvangaaa..

  Rain stop ana udane exam veika ithu semester ila..( nxt sem la pathuklam nu vida ) .. this is competitive exam.. at least two weeks must... after rain

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி