வேலைவாய்ப்பு குறித்த தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் மெட்ரோ ரெயில் நிறுவனம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2021

வேலைவாய்ப்பு குறித்த தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் மெட்ரோ ரெயில் நிறுவனம் எச்சரிக்கை

 

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இந்த துறைகளின் கீழ் பல்வேறு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. 


இந்த துறைகளிலோ, துறை சார்ந்த பிரிவுகளிலோ ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தால், அதற்கான முன் அறிவிப்பு அதிகாரபூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


இதைத்தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தளங்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. 


எனவே, வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளிவரும் வேலைவாய்ப்பு குறித்த அறிவுப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர வேற எந்த ஒரு இணையதளத்திலும் வெளியாகும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். 


மேலும், இந்த நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக தவறாக இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி