BT to PG (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

BT to PG (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.


BT to PG (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022 - ஆம் கல்வியாண்டில் பாடவாரியாக காலியாகவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு 01 / 01 / 2021 - ஐ மைய நாளாக கொண்டு உரிய தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் / மொழி ஆசிரியர்களை கொண்டு தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது.


 அரசாணை எண் . 720 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 28.04.1981 - ல் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணியின்படி ( The Tamil Nadu Higher Secondary Educational Service ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை 50 % நேரடி நியமனம் மூலமும் , 50 % பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்பட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில் , “ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் ( same subject ) இளங்கலை பட்டம் ( Bacheler's degree ) மற்றும் முதுகலை பட்டம் ( Master's degree ) பெற்று இருக்க வேண்டும் " என்று கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

BT to PG ( Chennai Corporation ) Tentative Promotion Panel List - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி