PGTRB - தமிழ் பயின்றவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2021

PGTRB - தமிழ் பயின்றவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்...

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் b.ed தொலைநிலை கல்வியில் படித்தவர்களுக்கு அது ஆங்கில வழி., எனவே அதற்கு தமிழ்வழி சான்று தர இயலாது என்று பல்கலைக்கழகத்தில் கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக கல்லூரியில் படித்தவர்களுக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தொலைநிலை கல்வியை அரசு பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும்பொழுது அதில் பயின்றவர்களுக்கு ம் தமிழ் வழி சான்றிதழ் கொடுப்பது தானே முறை. 

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு,  அந்த தமிழ் மொழியை எப்படி ஆங்கில மொழி மூலம் கற்றிருக்க முடியும் ? தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்று தமிழ் மொழி மூலம் தான் கற்பிக்க முடியும். வேண்டுமானால் இயற்பியல் பாடத்தை எப்படி பயிற்றுவிப்பது என்பதை ஆங்கில மூலமாக கற்பிக்கலாம். 
 இந்த சிக்கலினால், தமிழ் பயின்றவர்கள் இச்சலுகையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். 
 இப்படி ஒரு சிக்கல் உள்ளது அரசிற்கு ஏதாவது ஒரு முறையில் தெரியப்படுத்த வேண்டும். டி ஆர் பி விண்ணப்பிக்கும் மென் பொருளிலும் சிறு மாற்றம் செய்ய வேண்டும். இதனை ஒன்று பல்கலைக்கழகங்களுக்கு அறிவிப்பு கொடுத்தோ அல்லது டிஆர்பி விண்ணப்பங்களில் விதிமுறைகளில் மாற்றம் செய்தோ நெறிப்படுத்த வேண்டும். 
 தயவுகூர்ந்து இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு,  அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் தவிப்பில் காத்திருக்கிறார்கள்.
 மேலும் 50 வயது வரம்பில் சலுகை அளித்த பிறகும், 1976க்கு பிறகு  பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு உள்ளது. இன்னும் மென்பொருளில் மாற்றம் செய்யப்படவில்லை. நவம்பர் 9ம் தேதி வரையே கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 நடவடிக்கை எடுக்குமா அரசு ? 

பொன். சங்கர்
 திருப்பூர்

20 comments:

  1. 1976 க்கு முன் பிறந்தவர்கள் Apply பண்ணலாம்

    ReplyDelete
  2. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு +2 வரை pstm certificate போதுமானது

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தகுந்த மாதிரி எதிர்பார்க்குறீங்க
      😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. Ya I am English major but upto +2 studied Tamil medium only

      Delete
    3. I said to Tamil major only not others

      Delete
  3. தமிழ் வழியில் முன்னுரிமை கோர அரசானை எண் 82 முழுமையாக பின்பற்ற வேண்டும்

    ReplyDelete
  4. To Tamil major no need pstm certificate above +2. They studies only Tamil.

    ReplyDelete
  5. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் இதேபோல M.A TAMIL தொலைநிலைக்கல்வியில் படித்தவர்களுக்கு தமிழ் வழிப் சான்றிதழ் தரமுடியாது என்று கூறுகிறார்கள்.அரசு நடவடிக்கை எடுக்குமா?

    ReplyDelete
  6. தமிழ் பாடத்தில்bed படிப்பு என்றால் தமிழ் ஒரு பாடமாக தான் இருக்கும் மற்ற ஆறு பாடங்களையும் இவர் ஆங்கில மீடியத்தில் தான் படித்திருப்பார் Bed சேரும் போது எந்த மீடியமோ அது தான் நிலையானது தமிழ் பாடத்தில் ஒரு தேர்வை மட்டுமே தமிழ் வழியில் எழுதினால் தமிழ் வழிக் கல்வி முன்னுரிமை கோரமுடியாது . தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் தொலைதூர கல்வி முறையில்bed ஆங்கில மீடியத்தில் தான் கற்பிக்கப்படுகிறது.tnou tamiluniversity தவிர . சரியான வழிகாட்டுதல் படிதான் பல்கலைக்கழகம் முன்னுரிமை சான்றிதழ் வழங்கும் . தவறான முறையில் வழங்கினால் எதிர்காலத்தில் பிரச்சினை சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு தான்

    ReplyDelete
    Replies
    1. Bed., படிப்பை தமிழ் பாடத்தை தவிர மற்ற எந்த ஒரு பாடத்தையும் நேரிடையாகவோ அல்லது தொலைநிலை கல்வியிலோ பயின்றாலும் அது ஏற்புடையதே. முதல் வகுப்பு முதல் முதுகலை வரை தமிழ் மொழியில் பயின்ற ஒருவரால் பிஎட் படிப்பை மட்டும் எப்படி ஆங்கில மொழியில் பயில முடியும்? அதற்கான விதிவிலக்கை பல்கலைக்கழக நெறிமுறைகளில் நடைமுறைப்படுத்தி இருக்கவேண்டும். அதைத் தான் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். பின்னர் ஏன் தமிழ்வழிக் கல்விக்கான சலுகை வழங்கப்படுகிறதது? யாருக்காக மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது? மற்ற பாடங்களில் படித்தவர்களுக்கு தமிழ்வழி சலுகை வழங்கும் பொழுது தமிழில் படித்தவர்களுக்கு சலுகை பெறத் தகுதி கிடையாதா? எனவே, இந்தச் சலுகையின் பயனும், நோக்கமும் என்ன? இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு பயின்றவர்கள் இப்படி ஒரு சலுகை வழங்கப்படும் என்பதை எதிர்பார்த்திருக்க முடியும்? எனவே இந்தச் சிக்கலுக்கு மாற்று வழி தேட வேண்டியது அவசியம்.

      Delete
  7. Ippo kadaisiyaa ennathaan pannuvaanga or sollavarangaa ,trb..???. Pgtrb exam nadakkumaa, nadakkaathaaa..????.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குறைசொன்னால் தேர்வு தேதி தள்ளிப்போகும்

      Delete
    2. 2019தேர்வே இன்னும் முடிக்க படாத நிலையில் இந்த தேர்வு ௭ப்படி நடக்கும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியும் நடைமுறை படுத்த வில்லை

      Delete
  8. for tamil medium, u must get pstm certificate right from 1st standard to PG and B.Ed, more than 80 % of trb aspirants belong to pstm only upto 12th, we can't claim it, we must study ug pg and b.ed all in tamil medium, writing exams in tamil is not tamil medium.

    ReplyDelete
    Replies
    1. படிப்பை தமிழ் வழிக் கல்வி பிரிவில் நடித்திருக்கும் தேர்வு எந்த மொழியிலும் எழுதலாம்

      Delete
  9. இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் படித்தவர்கள் தமிழ் மொழியில் தான் படித்தேன் என்று சான்றிதழ் வாங்குவது முறையா தமிழை தமிழில் மட்டும் தானே படிக்க முடியும் அதற்கு எதற்கு சான்று

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது

      Delete
  10. ana BA MA Tamil major ku enda indha PSTM certificate???

    neenga ellam loosa illa loosu mathiri nadikkiringala


    10th 12th or UG ithula ethavathu onnula Tamil moli paadam kattayam irukkanumnu sattam podunga... atha vittutu kanda karumattha potutu irukinga....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி