எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள்? SGT & BT ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் வழிமுறைகள் வெளியீடு. - kalviseithi

Nov 19, 2021

எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள்? SGT & BT ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் வழிமுறைகள் வெளியீடு.

 

DSE - BT&SGT Fixation.pdf - Download here

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009 ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி 2019 2020 ம் ஆண்டில் ( 01.08.2019 ) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டது போன்று நடப்புக் கல்வியாண்டிலும் ( 2021-22 ) 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


 1 ) 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 10 வகுப்பு வரையிலும் , 1 முதல் 12 வகுப்பு வரையிலும் சில அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . இவ்வாறான பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் போன்றே ( RTE Norms ) 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும் , 61 முதல் 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்களும் , 91 முதல் 120 மாணவர்கள் வரை 4 ஆசிரியர்களும் 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களும் இதே போன்று ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்படவேண்டும் . ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது )


 2 ) 6 முதல் 8 வகுப்பு வரை 6 முதல் 8 வகுப்பு வரையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி , உரிஷமச் சட்டம் -2009 ( RTE Norms ) அடிப்படையில் குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்கப்படவேண்டும் . ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு சிரிவாகக் கணக்கிற்கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும் , ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 50 க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ( Section Bifurcation ) கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம் . ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது ) 


3 ) 9 முதல் 10 வகுப்பு வரை 6-10 வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளுக்கு குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் ( தலா ஒரு பாடத்திற்கு ஒரு பணியிடம் வீதம் ) அனுமதிக்கப்படவேண்டும் . மேலும் , 9 மற்றும் 10 ம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் ( 1:40 ) வகுப்பிற்கு ஒரு பிரிவாக கணக்கிற்கொள்ள வேண்டும் . ஒரு குறிப்பிட்ட வகுப்பில் ( 9,10 வகுப்பு ) மாணவர்களின் எண்ணிக்கை 60 க்கு மிகைப்படும்போது , அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ( Section Bifurcation ) கூடுதல் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் . ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது ) 


4 ) கூடுதல் தேவைப் பணியிடங்கள் ( Need Post ) மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும்போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும் , அப்பள்ளிக்குத் தேவையின் அடிப்படையிலும் ( Subject wise Specific Priority ) அறிவியல் , கணிதம் , ஆங்கிலம் , தமிழ் , சமூக அறிவியல் என்ற முறையில் நிர்ணயம் செய்திடவேண்டும்.


5 ) பாடவேளைகள் கணக்கிடுதல் ( Calculation of Periods ) மேலும் , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும் . ( Period calculation based on the number of sections work shcet model இணைக்கப்பட்டுள்ளது )

6 ) ஆங்கில வழிப்பிரிவுகள் பணியாளர் நிர்ணயம் i ) பார்வை -4 ல் காணும் அரசாணையின்படி அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டும் OF GOT அறிவுறுத்தப்பட்டதன் பேரில் அரசுப் பள்ளிகளில் 2012-13ம் கல்வி ஆண்டிலிருந்து 6 ம் வகுப்பிலும் அதன் பின்னர் தொடர்ந்து வரும் கல்வியாண்டுகளில் முறையே 7,8,9,10 ம் வகுப்புகளுக்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது தமிழ் வழிக் கல்வியில் ' பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப , ஆசிரியர் நிர்ணயம் செய்வது போன்றே , ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனியே ஆசிரியர் நிர்ணயம் செய்திட வேண்டும் .

 ii ) ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் . மேலும் , ஆங்கில வழிக் கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை 15 க்கும் குறைவாக இருப்பின் , அவ்வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகாமையில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.


7 ) உபரி ஆசிரியர்களைக் கண்டறிதல் ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டால் பள்ளிவாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்த இளையவர் ( Station junior ) யார் என்பதை தலைமை ஆசிரியரிடம் பெற்று அவரையே உபரி ஆசிரியர் பட்டியலில் பணி நிரவலுக்கு உட்படுத்த கணக்கிற்கொண்டு வருதல்வேண்டும். 


8 ) பணிநிரவல் சார்பான நடைமுறை பார்வை -5 ல் காணும் அரசாணையில் பக்கம் 4 ல் பத்தி 4 II ) i ) ii ) III ) i ) ii ) ஆகியவற்றில் தெரிவித்துள்ளவாறு பின்பற்றி செயல்படவேண்டும் . மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி 01.08.2021 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்துவகை அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ( பட்டதாரி / இடைநிலை ) சார்பான பணியாளர் நிர்ணய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் நேரில் உரிய பிரிவில் ( சி 3 )

DSE - BT&SGT Fixation.pdf - Download here


5 comments:

  1. Job poduvangala maatangala ?

    ReplyDelete
  2. Yennayya 20:1 nanunga apram 30:1 nanunga ippo 40:1 nahhhhhhhhhh mmmmm job poduvaaangaaaaa kandippa pouvaanga... Surplus(tata🖐️🖐️)thaa kaatuvaanga

    ReplyDelete
  3. Yana ma kanakku podranga sari 30 students ku oru teacher na ipo posting poduvingla matingala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி