4 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

4 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக பெய்த கனமழை காரணமாக இன்று ஒருநாள் விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை எம்ஆர்சி நகரில் பெய்த அதிகனமழையால் 21 செ.மீ மழை பதிவானது. சென்னை துங்கம்பாக்கத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் 20 செ.மீ மழை பதிவானது. விமான நிலைய பகுதியான மீனம்பாக்கத்தில் 15 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. சென்னை எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

மழைநீர் காரணமாக சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பாம்புகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய அவ்வப்போது பெய்து வருகிறது. மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தலாம், செம்பனார் கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி