பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வில் பள்ளிப் பார்வையின் போது ஆய்வு செய்யப்படுபவை:: - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 31, 2021

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வில் பள்ளிப் பார்வையின் போது ஆய்வு செய்யப்படுபவை::

 

⚡பள்ளி வளாகம் தூய்மையாக வைத்திருத்தல்.


 ⚡குடிநீர் வசதி  செய்து கொடுத்தல்.


 ⚡புத்தாக்க பயிற்சிக் கட்டகம் ஒவ்வொறு ஆசிரியரும் வைத்திருத்தல்.


⚡கழிவறை சுத்தமாக வைத்திருத்தல்.


 ⚡பள்ளியைச் சுற்றி தண்ணீர் தேங்கா வண்ணம் இருத்தல்.


⚡ குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒவ்வொரு ஆசிரியரும் வைத்திருத்தல்.


 ⚡கற்றல் விளைவுகள் உற்றுநோக்கல் பதிவேடு வைத்திருத்தல்.


⚡கல்வி தொலைக்காட்சி வீடியோஸ் பார்த்து கற்றலில் பயன்படுத்த  வேண்டும்.


⚡கற்றல் விளைவுகள் ஆசிரியர் செயல்பாடுகள் வைத்திருத்தல்.


⚡ பாடத்திட்டம் புத்தாக்கப்பயிற்சிக்கு  வாராவாரம் எழுத வேண்டும்.


 ⚡அதில் வலுவூட்டல் .கற்றல் விளைவுகள் இருக்க வேண்டும் இரு பக்கங்களுக்கு குறையாமல் எழுத வேண்டும்.


⚡பள்ளிக் கட்டடம் இடிப்பு விவரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


⚡தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரத்தினை நகல் எடுத்து வைத்திருத்தல்.


⚡உதவி எண்கள் அனைத்தும் மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


⚡ I T K தன்னார்வலர்கள் விவரம்.


⚡ பள்ளி செல்லா குழந்தைகள் விவரம்.


⚡மாணவர் மனசு பெட்டி மாதம் இரு முறை பெட்டியை  SMC  முன்னிலையில் திறந்து கடிதங்களில் குறிப்பிடப்பட்ட பொருள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிவேட்டில் குறிப்பிடுதல்.


⚡CSWN மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்ட விவரம். 


⚡பள்ளியின் மேல் படர்ந்த மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.


⚡ கையெழுத்து ஏடு .கட்டுரை ஏடு .வீட்டுப்பாடம் ஆகியவை திருத்தி தேதியுடன் கையொப்பம் இட்டு வைக்க வேண்டும்.


⚡சத்துணவுக் கூடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் தயாரிக்க வேண்டிய  உணவு அட்டவணை முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.


⚡EMIS இல் மாணவர்கள் .ஆசியர்கள் பதிவுகள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.


⚡பெயர் பலகையில் கடைசியாக ஆய்வு செய்த அலுவலரின் பார்வையிட்ட தேதி குறிப்பிட வேண்டும்.


⚡நூலக செயல்பாடுகள் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.


⚡ அங்கன்வாடி மையம் விவரங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


⚡பள்ளிக்கு தேவைகள் என்ன  என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


 ⚡SMC தீர்மானம் பதிவேடு ஆரம்ப நாள் முதல் வைத்திருக்க வேண்டும்.


⚡ TLM பயன்பாடு இருக்க வேண்டும் அதில் chalk  ஐ  TLM ஆக காட்டக்கூடாது.


 ⚡பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.


⚡ பெண் குழந்தைகளுக்கு வெளியில் இருந்தும் பிரச்சனைகள் வரலாம் அதையும் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


⚡நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதாவது S O P.


⚡தீக்க்ஷா  APP ஐ பயன்படுத்தி கற்ப்பிக்க வேண்டும்.


⚡நான் கற்றல் விளைவுகள் 100 சதவீதம் அடைய முயற்சிக்கிறேன் என பாடக்குறிப்பு பதிவேட்டின் முதல் பக்கத்தில் எழுத வேண்டும்.


⚡இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் குறித்த விவரத்தினை தெரிந்து

வைத்திருத்தல்.


⚡ மாணவர்கள் உடல் வெப்பநிலை ப் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.


⚡ மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டப் பொருட்களுக்கும் உரிய பதிவேடுகள் பராமரித்தல்.


⚡EMIS இல் ஆசிரியர் வருகை மாணவர் வருகை உரிய நேரத்தில் பதிய வேண்டும் NET WORK சரியில்லை என காரணம் கூறக்கூடாது.


⚡ மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல்.


⚡ படித்தல் திறன்  எழுதுதல் திறன் மற்றும் கணித  அடிப்படைத்திறன்கள் சோதித்தல்.


⚡TC ,

வழங்கப்படாமல் இருக்கக் கூடாது.


⚡ கல்வி ஊக்கத் தொகை பெற்று வழங்கிய பதிவேடுகள்.


⚡T C பெற்ற மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தால் அவர்களின் பெற்றோரை சந்தித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


⚡வகுப்புகள் எந்தெந்த வகுப்பறைகளில் நடைபெறுகிறது என்பதை தலைமையாசிரியர் தெரிந்திருக்க வேண்டும்.


⚡அலமாரி அறைகளை திறந்து பார்க்கும் போது பதிவேடுகள் அடுக்கி வைத்திருக்க வேண்டும்.


⚡ வெளியிலிருந்து பணமாகவோ அல்லது பொருளாகவோ பெற்று ஏதேனும் சிறப்பாக பள்ளிக்கு செய்திருந்தால் அதை பார்வையிட  வருபவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.


⚡தலைமை

ஆசிரியர் மேஜையில் மாணவர் வருகைப்பதிவேடு .

ஆசிரியர் வருகைப்பதிவேடு போன்றவை இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி