9, 11 வகுப்பு மாணவா் விவரங்களை பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2021

9, 11 வகுப்பு மாணவா் விவரங்களை பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவு.

 

பொதுத்தோ்வுக்கு முன்கூட்டியே திட்டமிடும் வகையில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கை:


 சிபிஎஸ்இ பள்ளிகளில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை பள்ளிகள் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும். இதன் அடிப்படையில்தான் அடுத்து வரும் ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்த திட்டமிட முடியும்.ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் செய்து கொள்ள முடியும்.

எனவே, தற்போது 9, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் விவரங்களை சிபிஎஸ்இ இணையதளத்தில் டிசம்பா் 15 முதல் இணையவழியில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி