தலைமையாசிரியர் பதவி உயர்வு : சிக்கலுக்கு தீர்வு காண அரசுக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2021

தலைமையாசிரியர் பதவி உயர்வு : சிக்கலுக்கு தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

 

மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற, கூடுதலாக இரு துறை தேர்வுகள் எழுதியிருக்க வேண்டுமென, விதிமுறைகள் மாற்றியதால், தகுதியுள்ளோர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற, நான்கு துறை தேர்வுகளில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, தற்போது வரை இரு முறை மட்டுமே, துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 

புதிய துறைத்தேர்வுகள் குறித்து அறிவிக்காததால், தகுதியுள்ள பலர் இத்தேர்வு எழுதவில்லை. எனவே, கலந்தாய்வு விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா கூறியதாவது :

கொரோனாவுக்கு ஊரடங்கு அறிவித்த, இரு மாதங்களுக்கு முன்னர் தான், புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டன. அரசிதழில் வெளியான அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் சென்றடையவில்லை.

பதவி உயர்வு தடைபட்டால், சீனியாரிட்டி பாதிக்கப்படும். ஆசிரியர்கள் சிலர், நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்ந்தால், காலியிடங்களை நிரப்ப முடியாமல் நிர்வாக பணிகள் தேக்கமடையும். இச்சிக்கலுக்கு அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நிச்சயம் யாரும் பாதிக்காத வகையில் வழங்க வேண்டும். ஆனால் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வரையில் முந்தைய பணிநிலையில் வழங்கப்பட்ட சம்பளம் மட்டுமே வழங்கலாம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி