தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணை குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசு வேலையில் சேர விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலேயே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெறும். தமிழ்நாட்டில் அரசுப்பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பழனிவேல் தியாகராஜன், தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர், வனத்துறை தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 80க்கும் மேற்பட்ட தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துவதால் அதன் எண்ணிக்கையை குறைக்க பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது. நிபுணர்களுடன் ஆலோசித்து தேர்வு முறையில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பான கல்வி திட்டம் உள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வேளையில் வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.
வரவேர்க்கதாக்கது. ஆனால் தமழகத்தில் பூர்வீகமாககொண்ட உருது முஸ்லிகள் உருது medium படித்தவர்களின் நிலை என்ன?!! Minority communities like Telugu, Malayalam and kannada medium படித்தவர்களை வஞ்சிக்கூறிங்களா?
ReplyDeleteவேணும்னா தமிழ் படிங்க டா.... உங்களை எல்லாம் யாரு கேட்டா....
DeleteS English teacher, u study at least one subject tamil in tamilnadu, if u want malayalam go to kerala, kannada go to karnataka, Telugu go to Andra, if u want in tamilnadu government job pls study in one subject Tamil because u serve Tamil known people...
DeleteSir there are many tamil nadu government schools in borders like Kerala, Karnataka and Andhra
DeleteKumar sir, u said exactly.
Deletemuthalil tnpsc,trb,tet anoncement kodunga pirakuparpom
ReplyDeleteanaithu pallikalilum techers illai illam thedi kalviya?
ReplyDeleteWhat 10 th mark sheetla Tamil 40 & above irukkanuma... Ithu GO la illaye compitative examla above 40 irukanum nu thane solli irukkel am i right?
ReplyDeleteHelo நான் 10th தமிழ்ல 36 மார்க் தான் நாணும் தமிழன் தான்
ReplyDeleteyes, we know ur tamil standard, நானும்
Delete2017 எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் ஓவியம் படித்தவர்களுக்கு 20% தமிழ் இட ஒதுக்கீடுகளில் 2021 வந்த அரசு ஆணை படி பணி வழங்குவது பொருத்தம் அடையுமா?
ReplyDeleteமாண்புமிகு கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,,,,,,2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் ஓவியம் படித்தவர்களுக்கு தமிழ் இட ஒதுக்கீடு என்பது கேள்வியாகவே உள்ளது,,,,,2017 ல் எழுதிய தேர்விற்கு 2021 ல் வந்த அரசு ஆணை படி பணி தனி தேர்வர்களுக்கு கிடையாது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது,,,,அப்படி என்றால் தேர்வாகி உள்ளே சென்று பணி நியமனம் செய்தவர்களில் தனி தேர்வர்கள் இல்லாமல் இருக்கின்றனர்?
ReplyDeleteபோட்டி தேர்வு என்றால் மதிபெண் மட்டுமே முக்கியத்துவம் வேண்டும்,,,இது அதிஷ்ட தேர்வு போன்று இருக்கிறது,, 100 மதிப்பெண் தேர்விற்கு 38,43,45,50 மதிப்பெண் வாங்கியவர்கள் எல்லாம் திறமையானவர்கள் 60,,61,,62,,மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் துரதிர்ஷ்டவசமானவர்கள்,,,,,காலமும் கடவுளும் பதில் சொல்ல வேண்டும்
ReplyDeleteவேலை வாய்ப்பு அட்டையில் அரசு தற்போது வாய்ப்பு
ReplyDeleteகொடுத்துள்ளது,,,,அப்படி என்றால் சிறப்பாசிரியர்களில் pending posting irukum இடத்தில் இதன் மூலம் மதிபெண் கிடைப்பவர்களுக்கு அரசு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்
ஆசிரியர் தேர்வு வாரியம் நியாயம் உள்ளதாக செயல் படும் என்று நம்புகிறேன்,,,,,லதா அம்மா அவர்கள் என்றும் நியாயத்தை கடை பிடிப்பவர்,,, அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது ,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் ஒரு நல்வழி பிறக்கும்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் தலைமை அம்மா அவர்களே! சிறப்பாசிரியர்கள் ஓவியத்தில் 60 மற்றும் 60 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு அடிப்படையில் பணி வழங்க முடியுமா என்று ஆலோசனை செய்யுங்கள்
ReplyDeleteகொஞ்சமாவது சிந்திங்கட!!!
ReplyDeleteதமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறவர் தாய் மொழி வேறாக இருந்தாலும் அவருக்கு அரசு பணி என்று தான் சொல்லியிருக்கிறது ஸ்டாலின் அரசு.
ஆனால் இது தெரியாம தமிழ் பூர்வ குடிகளுக்கே 100%அரசு வேலை என்று ஸ்டாலின் அறிவித்ததுள்ளதாக ஒரு கூட்டம் நம்மை நம்பவைக்கிறது.
வெற்று அறிவிப்பு மட்டுமே விடியல் வரவில்லை எங்கள் கஷ்டம் விடிந்த பாடில்லை
ReplyDeleteஎதுக்கு டா போட்டு கொழப்பிட்டு இருக்கிங்க ... 10th இல்ல 12th இல்ல degree .... மூனுல எங்கயாச்சும் ஒரு தமிழ் மேஜர் இருந்தா போதும்னு சட்டம் போட்டாலே போதும்... தெண்டமா exam... அப்படி படிக்கலனா distance education la ஒரு degree படிச்சுட்டு வா.... தமிழ் ஒரு பாடமாக வச்சுட்டு....
ReplyDelete