மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - திருவாரூர் மாவட்டத்திற்கு பதிலாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் சேர்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 13, 2021

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - திருவாரூர் மாவட்டத்திற்கு பதிலாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் சேர்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தில் திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி வட்டம் , முத்துப்பேட்டை தர்காவில் மாபெரும் கந்தூரி புனித சந்தனக்கூடு விழா 15.12.2021 அன்று ( புதன்கிழமை ) நடைபெறவுள்ளதால் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்திற்கு பதிலாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் குறிப்பிட்டுள்ள இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் ஆய்வு மேற்கொள்வர்.

தஞ்சாவூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் 16.12.2021 அன்று பிற்பகல் 02.00 முதல் 05.00 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது தஞ்சாவூர் மண்டலத்தை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் , மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் ( இடைநிலை மற்றும் மேல்நிலை ) கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி