Flash News : ஜனவரி 1 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2021

Flash News : ஜனவரி 1 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேலும், பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.




30 comments:

  1. டேய் அந்த Calculater எடு
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  2. மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார்கள்..வாழ்க..அய்யாவின் தொண்டு.. வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. பாராட்டி பதக்கம் அளிக்கவும்... விலை வாசி விண்ணை முட்டுது...

      Delete
  3. பொங்கல் தொகுப்பூதியம் ரூபாய் 2500 கொடுக்கலாமே இவர்களுக்கு கொடுப்பது போல

    ReplyDelete
  4. வாக்களித்த மக்களுக்கு எதை உயர்த்தியுள்ளீர்கள்

    ReplyDelete
  5. தி .மு .க என்பது அனைவருக்கும் ,அனைத்து மக்களுக்கும் ஆன ஆட்சி என்பதை தலைவர் நிருபித்து உள்ளார் ........

    ReplyDelete
  6. நிலுவை தொகை என்னாச்சு ??அதுவே பல கோடி ரூபாய் வருமே!EL surrender ??

    ReplyDelete
  7. Velali vaipai anavarukkum samamaga vazhangu tet postit podunga

    ReplyDelete
  8. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், அரசு ஊழியர்களின் அகவிலைப் படி உயர்த்தியதில் சந்தோசமே, ஆனால் தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகலாக இருந்து அரசு கல்லூரிகலாக மாற்றம் செய்யப்பட்ட 41 கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதியமும் மற்றும் தமிழக அரசால் 26-2-2020 - ல் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வும் இது வரை கிடைக்கப்பெறவில்லை எங்களுக்கும் குடும்பம் ஒன்று உள்ளது, எனவே கல்விசெய்தி செயலகம் அரசுக்கு தெரியும் வரை தெரியப்படுத்துங்கள்.. இப்படிக்கு முனைவர் அ.சின்னத்தம்பி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இலால்குடி...

    ReplyDelete
  9. ஜனவரி 2022க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடந்தால் அவர்கள் வாங்கும் ஆரம்ப சம்பளம் எவ்வளவாக இருக்கும். யாராவது கூறுங்கள். ப்ளீஸ்

    ReplyDelete
  10. ஜனவரி 2022க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடந்தால் அவர்கள் பெறும் ஆரம்ப சம்பளம் எவ்வளவாக இருக்கும். யாராவது கூறுங்கள். ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. 27000+6500 அவ்வளவு தான் கிடைக்கும் புதிதாக பணியில் சேர்ந்தால்

      Delete
    2. Sir r u sleeping, I India got 1947

      Delete
  11. 48534ல் cps பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும். யாராவது கூறுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. 10 % dedection , but posting will be on May month only

      Delete
    2. இந்த பணம் அதிகம் இது பொய் இவ்வளவு தொகை வராது

      Delete
  12. Again lock down comes on Feb 2022, so no need new posting

    ReplyDelete
  13. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் உண்டா. செய்திதாள்களில் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தேவை என விளம்பரம் வருகிறதே. அதைபற்றி யாராவது தெரிந்தால் கூறுங்கள் ப்ளீஸ் 🙏🙏

    ReplyDelete
  14. டெட் தேர்ச்சி பெற்றிருந்தால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்..

    ReplyDelete
  15. Basic 36400,HRA 4200 if near or in Chennai, City allowances 1200,DA 31 % of basic 11284 so total gross salary 53084 deduction 10% basic cps 3640,othe%s 480 like insurance etc so net salary 48964 for BT asst posting near Chennai city

    ReplyDelete
  16. நான் குப்பகோணம் அருகில், அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி உண்டு என்று கேள்விபட்டேன், நான் டெட்தேர்ச்சி பெற்றுள்ளேன். அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றுதான் சம்பளம் எவ்வளவு வரும் என்று கேட்கிறேன்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கோவப்படமால் யாராவது தெளிவாக கூறுங்கள். ப்ளீஸ் 🙏🙏

    ReplyDelete
  17. மன்னிக்கவும் கும்பகோணம்

    ReplyDelete
  18. Kumbakonam HRA maybe 1800 or 1500 other salary break up same ...pls follow above my earlier reply

    ReplyDelete
  19. சார் என் பெயர் பார்த்தசாரதி. நான் தமிழ் மேஜர். டெட் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் ராமநாதபுரம்மாவட்டம்.எனக்கு bt posting அரசு உதவி பெறும் பள்ளியில் கேட்டுள்ளேன். அப்படி கிடைத்தால். எனக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும். ப்ளீஸ் கூறுங்கள் 🙏🙏

    ReplyDelete
  20. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் உண்டா யாராவது .கூறுங்கள்.

    ReplyDelete
  21. Salary contradictions for SGT should be weeded first of all. Who gets more salary gets more previleges and who gets low salary gets lowest previleges. But the work pressure is not even same more than that.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி