இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2022

இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் கடிதம்

1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம்...


அனைத்துப்பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.01.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது .எனினும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வரவேண்டும்.


 அவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது . O மழலையர் விளையாட்டு பள்ளிகள் ( Play Schools ) , நர்சரி பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதியில்லை . 0 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து , சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


எனினும் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கம்போல் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் .


அரசின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . முககவசம் அணிதல் சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

 

Prohibition of direct classes from 1st to 8th Standard - Teachers should come to school - Illam Thedi Kalvi Scheme classes will be held as usual - Tiruvannamalai District Collector's letter

1 comment:

  1. Schools ah close pannanum. .. But ITK function aagalam.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி