அரசு பள்ளிகளில் ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் 12ஆயிரம் ஆசிரியர்கள் 10ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிபடி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
முதல்வர் பதவி ஏற்கும் முன்பே கடந்த ஆண்டு மே 3ம் தேதி அன்று சுகாதாரத்துறையில் 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்து விடியலை கொடுத்தார்.
தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கையில் கதர் கைத்தறி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோரை நிரந்தரம் செய்ய அறிவிக்கப்பட்டது.
வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நிரந்தரம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையில் சிவாச்சாரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் என அறிவிக்கப்பட்டது.
அதுபோலவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் இருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றி சாதனை புரிந்து உள்ளார்.
181-வது உறுதிமொழியான பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வாய்மொழி அறிவிப்பாகவே உள்ளதால், இலவு காத்த கிளியாக தவித்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வர, சுற்றுப் பயணங்களில் நேரில் கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம்.
மேலும் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் இதேபோல் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம்.
சட்டசபையிலும் கொமதேக பொதுச்செயலாளர் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன், பாமக தலைவர் பெண்ணாகரம் எம்எல்ஏ கோ.க.மணி, தவாக தலைவர் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சி கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ மா.மாரிமுத்து ஆகியோரும் பணி நிரந்தரம் குறித்து பேசி உள்ளார்கள்.
2022 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக ரெ.வைத்திலிங்கம் ஒரத்தநாடு எம்எல்ஏவிற்கு, பதில் தெரிவித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்தல் அறிக்கைபடி செய்வோம் என்றார்.
பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் தனது அறிக்கை, பேட்டியில் தெரிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனை அரசாணையாக்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த 16ஆயிரத்து 549 பேரில்,பணிநிரந்தரம் கனவோடு 4 ஆயிரம் பணியிடங்கள் மரணம், 58 வயது பணிஓய்வு
காலியிடமாகிவிட்டது.
இப்போதும் ஆயிரம் பேருக்கும் மேல் பணி ஓய்வை நினைத்து நிலையில் கவலையில் உள்ளார்கள்.
எனவே விரைவில் நிரந்தரம் செய்து அனைவரின் அச்சத்தையும் போக்கிட வேண்டுகிறோம்.
தற்போது 12 ஆயிரம் பேருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு ரூ.13 கோடி செலவு பிடிக்கிறது.
இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் ரூ.20 கோடி செலவிட நேரும்.
இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள், ஏழைகள் நிலை உயர அரசு மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம் என்றார்.
TET தேர்ச்சி பெற்ற நண்பர்கள் " முதல்வரின் முகவரி " என்ற இணைய தளத்தில் , TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவும், தேர்தல் அறிக்கை வ.என்.177 ஐ நிறைவேற்ற கோரியும் அனைவரும் கோரிக்கை வைப்போம். மேலும் CM Cell ku , கோரிக்கை மனு அனுப்பவும். நன்றி . அன்புடன் தகடூர் தனபால்.
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் முதல் பட்டியலில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteலதா அம்மா சிறப்பாசிரியர்கள் ஓவியம் முதல் தேர்வு பட்டியலில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் ,,,உங்கள் நன்றி மறக்காமல் இருப்போம்,,,குறிப்பாக 60 மேல் எடுத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
ReplyDeleteலதா அம்மா கருணை காட்டுங்கள்,,,,,நாங்கள் உங்களை நேரில் வந்து பார்க்கும் போது நம்பிக்கை யுடன் திரும்பினோம்,முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் தாருங்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் முதல் பட்டியலில் உள்ளவர்களையும் பணிநியமனம் செய்யுங்கள்
ReplyDeleteநல்லதோ கெட்டதோ சிறப்பாசிரியர்கள் 2017ல் எழுதிய தேர்வில் pending posting ellam mudinga
ReplyDeleteஉடற்கல்வி ஆசியர்களும் பாவம் ஒரு முடிவுகள் சொல்லுங்கள்
ReplyDeleteதிராணியற்ற அரசு
ReplyDeleteSathiyama yarukkum ethuvum seiya porathu illa ivanga condition ethachum pottu oru 2000 numbers ku than posting poduvanga.bcos nagaikadan kadan thallupadiyil nadanthathu theriyuma friends.sep GO passed but April la than nagai kidaikuma enna plan na March varai eligible yellarume nagaiya mootuduvanga apram avangulukku vendiyavangalukku koduppanga evlo pakkava yosikiranga parunga so pls tnpsc ku try pannunga
ReplyDeleteலதா அம்மா அடுத்த மாதம் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான கேள்வித்தாள் கடந்த 2019ல் நடைபெற்றது போல் கடினமாக இருக்குமா அல்லது சுலபமாக இருக்குமா எனத் தெரியவில்லை சுலபமாக இருந்தால் கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும்
ReplyDeleteLatha mam romba help panna kuudiyavargal,, because special teachers exam mudinja piragu neraya problems vanthapa kuuda,,,,தேர்வு எழுதிதவர்களை ஏமாற்ற கூடாது என்று முடிவு செய்தார்கள்,,,அதே போன்று முதல் பட்டியல் சரியாக தான் தேர்வு செய்தார்கள்,,,,சிலர் செய்த பிரச்சினை யின் காரணமாக இவ்வளவு காலம் பணி நியமனம் செய்யாமல் இருக்கிறது ,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம்,,,,,,,
ReplyDeleteதமிழ் வழியில் உள்ளவர்களுக்கு மட்டும்
Deleteஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர் லதா mam. ஓவியம் முதல் பட்டியலில் உள்ளவர்களையும் பணிநியமனம் செய்யுங்கள். ,,,ஏனெனில் அவர்கள் அனைவரும் மூன்று வருடமாக இந்த பணிக்காக பல கஷ்டங்களை பார்த்துவிட்டார்கள்,,,,, இதனால் குடும்பத்தில் விரிசல் கூட நடந்தது. Please mam. Engalukaga help pannunga mam
ReplyDeleteநீங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மறுபடியும் தலைமை பொறுப்பை ஏற்ற போது சிறப்பாசிரியர்கள் முதல் பட்டியலில் உள்ளவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள், அவர்கள் நம்பிக்கை வீணாகாமல் இருக்க வேண்டுகிறேன்
ReplyDeleteTET பாஸ் பண்ணாம எப்படி போஸ்டிங் போடுவாங்க? திறமை இருந்தா பாஸ் பண்ணுங்க. உடனே வேலை
ReplyDelete