ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: சிவா - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 31, 2022

ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: சிவா

 

ஆசிரியர் படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை:


புதுச்சேரி அரசில் ஆசிரியர் பணிக்கு, மத்திய அரசு நடத்தும் 'சி -டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.தற்போது தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அதில் எடுக்கும் மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் தரப்படாது, தகுதியாக மட்டுமே கருதப்படும் எனவும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் பணிக்கு என படித்துவிட்டு, பின்னர் அதற்கான தகுதித் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றாலும் பணி வழங்கப்படாது 


என்றால் எதற்கு அந்தத் தேர்வு?தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது, ஊழலுக்கு வழி வகுக்கும்.எனவே ஆசிரியர் படிப்பு முடித்து, ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும்.அல்லது புதுச்சேரி அரசே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி சீனியாரிட்டி அடிப்படையில் பணியை வழங்க வேண்டும்.ஏதேனும் ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்றும், தமிழகத்தை போல் வயது தளர்வு வழங்கியும், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.அரசுப் ஆசிரியர் பணிக்கு வர விரும்புவோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

 1. tnpsc கிட்ட கொடுத்துட்டு மூடினு போங்கடா..

  ReplyDelete
 2. Untill last poor people can't get job. Because of unskilled politicians & officers. I passed 2013 itself but they won't give job

  ReplyDelete
 3. போட்டி தேர்வு கிடையாது என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இப்ப போட்டி தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது மிக கொடுமை ..

  ReplyDelete
 4. ஆகவே தமிழக ஆசிரியர் பணி நாடுனர்களே சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி