அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு: ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 24, 2022

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு: ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு.

 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பி.ஏ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 1 நிலவரப்படி, அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நி்ர்ணயம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பு கல்விஆண்டில் (2021-2022) அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்பணியிட நி்ர்ணயம் மேற்கொள்ளப் பட்டது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அனுமதி அளித்து ஆணைவழங்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களைநிரப்பத்தக்க காலிப்பணியிடங்களாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.9 comments:

 1. இடவசதி கழிப்பிட வசதி சரியாக இருக்குமா

  ReplyDelete
 2. TRB la enna than nadakuthu onnum puriyala

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் நீங்க கேக்க கூடாதுன்னு நாங்க 200கிமீ அப்பாலிக்கா சென்டர் போட்றோம்...
   அப்பயும் கேப்பிங்க கேள்வி 😡😡😡

   Delete
 3. வருடாந்திர அட்டவணையில் பட்டதாரி ஆசியர் பணியிடங்கள் குறைவாக காட்டப்பட்டுள்ளது

  ReplyDelete
 4. 2013 TET தேர்ச்சி பெற்ற மக்களுக்கு அரசு கொடுத்த சரியான எதிர்பார்ப்பு மரியாதை

  ReplyDelete
  Replies
  1. 2013ன்னு பிரிக்காதீங்க....
   நீ அந்த முக்குனா ....
   நான் இந்த முக்கு....
   பிச்சை பிச்சை தான் ...
   முன்னேற வழிய பாருங்க ஜி ...
   டெட் + சீனியரிட்டி கேளுங்க....

   Delete
 5. வேஸ்ட் sir no posting competitive exam only 1098 posting

  ReplyDelete
 6. 2013 தகுதித்தேர்வு வைத்தே நியமனம் செய்யலாம்
  திமுக அரசு திடிரென அந்தர் பல்டி அடிப்பது வேதனைக்குரியது

  ReplyDelete
 7. Voted DMK waste government achi Sari illai

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி