Flash New$ - 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

Flash New$ - 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்!


 1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை.


2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.


3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.


4 ) அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.


5 ) பயிற்சி நிலையங்கள் ( Training and Coaching Centres ) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.


மேலும் பல புதிய கட்டுப்பாடுகள்...

TN GOV Press News 5.8.2022 - Download here


*⭕தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!


*⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு.


*⭕நாளை முதல்  இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.


*⭕அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.


*⭕ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


*⭕1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.


*⭕பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்.


*⭕கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave).


*⭕பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.


*⭕அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.


 *⭕பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


*⭕வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.


*⭕அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி.

3 comments:

  1. தயவுசெய்து பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை வேண்டாம்.அவர்களது கல்வி மிகவும் பாதிக்கபடும்

    ReplyDelete
  2. Pls update ADW schools vaccancy list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி