குரூப்-2 தேர்வுகள் இன்று அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 18, 2022

குரூப்-2 தேர்வுகள் இன்று அறிவிப்பு

 

தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 2, குரூப் - 2 ஏ' பதவிகளுக்கான தேர்வு இன்று(பிப்.,18) அறிவிக்கப்படவுள்ளது.


தமிழக அரசு துறைகளில், சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, நகராட்சி அதிகாரி உள்ளிட்ட, குரூப் - 2; கருவூலத்துறை கணக்காளர், பல்வேறு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட குரூப் - 2 ஏ பதவிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் இன்று, தேர்வு விபரத்தை வெளியிடுகிறார். 


அதேபோல, இந்திய வனத்துறை பணிகளுக்கான தேர்வும், குரூப் - 1 பிரதான தேர்வும், மார்ச் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. இதனால், குரூப் - 1 தேர்வை தள்ளி வைக்கப்படும் என, சில தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்தும், இன்று விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி