பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை, அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில், இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடக்கிறது.
இதுதொடர்பாக, உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் சார்பில், பல்கலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து பல்கலைகளும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்களை, உயர்கல்வி துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
சரியான முடிவு
ReplyDeleteGood Decision...
ReplyDeleteTNPSC group 2 அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது மேலும் வேலைவாய்ப்பு தகவலைப் குழுவில் இணையுங்கள்
ReplyDeleteHigher education depr
ReplyDeletetment thungutha set exam enna achu
உதவி பேராசிரியர் பணிகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். இதனால் பல இலட்சம் ரூபாய் கொடுத்து பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பதவி பெறும் ஊழல் ஒழியும்.
ReplyDelete