பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 18, 2022

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

 

'ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஏ.முத்து. இவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டு முதல், பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்க கோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 2019-ல் நிராகரித்தார். அவரது உத்தரவை ரத்து செய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். 7 நாளில் மொத்தமுள்ள 168 மணி நேரத்தில் 14 மணி நேரம் மட்டும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மக்கள் வரிப்பணித்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கவுரமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பும், கடமையும் தனியார் நிறுவன ஊழியர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிமாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் தொழில் புனிதமானது. ஆசிரியர்கள் நல்ல நடத்தை  கொண்டவராக இருக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற ஆசிரியர்களின் நடத்தையை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே, தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளார். ஆனால் 2004-ல் இருந்து பணி வரன்முறை செய்யக் கோரி 2019-ல் தான் மனு அளித்துள்ளார். மேலும் மனுதாரர் 2004-ல் பணி நியமன விதிப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

26 comments:

 1. S.M சுப்பிரமணியம் ஐயா....... தவறான கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம்.அனைத்து அரசு ஊழியர்களை போலவே ஆசிரியர்களும் பணி செய்கின்றனர். ஊழலே இல்லாத ஒரே அரசு ஊழியர் ஆசிரியர்கள் மட்டுமே.... பணி முடிந்து செல்லும் போது கறை( சுண்ணாம்பு கறை தவிர) படாத ஒரே கரம் ஆசிரியர்கள் கரமே..... அனைத்து ஆசிரியர்களும் தவறானவர்கள் அல்ல... நீங்கள் இந்த பதவியில் இருப்பதற்கு ஆசிரியரும் ஒரு காரணம் என்பதை மறவாதீர்கள்.....

  ReplyDelete
 2. ஒரு வாரத்துக்கு 14 மணி நேரம் மட்டும் தான் வேலை செய்றாங்க அதை நீங்க பார்தீங்க... அப்போ ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் தான் வேலை செய்றாங்க னு சொல்றீங்க அப்டி தானே ? அப்டின்னா காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ? நல்ல தீர்ப்பு ... நாடு முன்னேறி கொண்டு உள்ளது
  போல கூடிய சீக்கிரம் வல்லரசு ஆகிவிடும்.

  ReplyDelete
 3. வாரத்தில் 7 நாட்களும் 168 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருக்கும் நீதிபதி SMS அய்யா அவர்களுக்கு ...
  உங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ..
  பணி வரன்முறை பற்றியது. நீங்கள் பேசி இருப்பதோ ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தை பற்றியும், அவர்களின் வேலை நேரத்தை பற்றியும் அவர்களின் சம்பளத்தை பற்றியும் . பொய்யான வதந்திகளை கிளப்பி ஆசிரியர்களின் வயிற்றெரிச்சல் கொட்டி கொள்ள வேண்டாம். வாரத்தில் 14 மணி நேரம் மட்டும் தான் உழைக்கின்றார்களா ஆசிரியர்கள்? அனைத்து ஆசிரியர்களும் 1 லட்சம் மேல் சம்பளம் வாங்கி கின்றனரா? பொத்தாம் பொதுவாக பேசி விட்டு போக வேண்டாம். பொறுப்பான பதவியில் உள்ளீர்கள் அதை மறந்து விட வேண்டாம்.கண்டிக்கின்றோம் உங்களை

  ReplyDelete
 4. Whether he is a third right politician???...

  ReplyDelete
 5. ஐயா,பள்ளிக்கல்வி துறையில் கட்டாய பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து இடம் மாறுதல் பெற்ற ஆசிரியரகளுக்கு முன்னுரிமை வழங்க படாமல் அலைகழிப்பது ஏன்?
  அவர்கள் எப்பள்ளிலி௫ந்து மாற்ற பட்டாரகளோ அப்பள்ளி இப்பொழுது காலி பணியிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ்
  இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை

  ReplyDelete
 6. தீர்ப்பு சொல்லதான் சம்பளம் வாங்குறீங்க. உங்க கருத்த எல்லாம் பெரிய கோயில் கல்வெட்டுள எழுத தொல்லியல்துறைக்கு உத்தரவு போடுங்க சாமி.

  ReplyDelete
 7. மூன்றாம் தரமான கேவலமான பேச்சு. அவரது தரம் அப்படி தானோ? இவர்கள் எல்லாம் எப்படி இந்த ஒரு பதவிக்கு வர முடிந்தது

  ReplyDelete
 8. நீதிபதிகள் மீதும் உள்ளே வெளியே ஆய்வு செய்யவேண்டும். Rss பயிற்சி பெற்றவர்களெல்லாம் நீதி சொல்லலாமா....கல்யாண அகதிகள் படத்தில் வரும் மமதத்துவேசகக்கருத்துக்களைச் சொல்லி நீதிசொன்ன நீதிபதி சுவாமிநாதன் உங்க துறை தானே.....முதல்ல உங்க Department ஐ. புனிதமாக்குங்க ...அப்புறம் வசனம் பேசலாம்

  ReplyDelete
 9. முதலில் உங்களை கண்காணிக்க வேண்டும் நீங்களும் ஒரு நீதிபதி

  ReplyDelete
 10. முன்னல்லாம் எவன்டா நீதிபதியா போட்டாங்க ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தின் கணக்கு வைத்து வேலை செய்யணும் னு சொல்ற. நீ ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்யும் நாயே இரவிலேயே ஓவர் டூட்டி பாக்குறியா

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் சரியான போட்டி

   Delete
 11. Today teachers teaching the students how to copy in exam hall the tell the answers in exam hall. They don't teach the honest and truthful.

  ReplyDelete
  Replies
  1. Please don't blame all the teachers blindly. That is very very rare. You too don't act like that judge

   Delete
  2. நீ இப்படி தான் பாஸ் ஆகி வந்த யா

   Delete
 12. எந்த பள்ளியில் 2 மணி நேரம் வேலை மட்டும் வேலை? இது உண்மை இல்லை..

  ReplyDelete
 13. 99% வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் நீதி அரசர்களில் இவரும் ஒருவர். இவர் வழங்கிய பல தீர்ப்புகள் மேல்முறையீட்டில் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் விவரம் தெரிந்த வழக்கறிஞர்கள் இவர் பெஞ்சில் வழக்கு வர விரும்புவதில்லை. இவர் Consider pass order ஆணை பிறப்பிப்பதே பெரிய அதிசயமாக வழக்கறிஞர்கள் பார்ப்பார்கள் என்பது உண்மை. இதனாலயே இந்த விசாரணை பெஞ்சில் இவர் அதிகமாக வர அரசு வழக்கறிஞர்கள் முயற்சி செய்கின்றனர்.

  ReplyDelete
 14. ஒரு நீதிபதினா என்னவெல்லாம் பேசலாமா? அரசியல்வாதி போல நீங்களும் மாறிவிட்டீர்கள்.

  ReplyDelete
 15. நடத்தை கண்காணிக்க பட வேண்டியவர்களுக்கு எதற்கு தேர்தல் பணி வழங்க வேண்டும்.
  தேர்தல் ஆணையம் நீதியரசனின் கருத்தை ஏற்று ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி விலக்கு அளிக்க வேண்டும்.
  முடியுமா???

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி