ஆசிரியர் மாறுதல் -Staff fixation சார்ந்து அரசுக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2022

ஆசிரியர் மாறுதல் -Staff fixation சார்ந்து அரசுக்கு கோரிக்கை

 

கூடுதலாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் Staff fixation - ல் கணக்கிட்டு அனுமதிக்கப்பட்ட தேவை பணியிடங்களில் ( Need Post) உபரி ஆசிரியர்களை ( Surplus Teachers) நியமித்த பின்னர், மீதமுள்ள பணியிடங்களில் பொது மாறுதலில்  ஆசிரியர்களை நியமிப்பதே கூடுதலாக மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும். 


    அரசுப் பள்ளிகளை நம்பி குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த கூடுதலாக மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர்கள், தற்போதைய   கலந்தாய்வின் மூலம் அனுமதிக்கப்பட வேண்டும். 


    Need post நிர்ணயிக்கப்பட்டதன் நோக்கம் உபரி ஆசிரியர்களை (Surplus Teachers) அந்தப் பணியிடங்களில் நியமிப்பதற்காக மட்டுமே என இருந்தால் அது நிர்வாகப் பணியாக மட்டும் இருக்கும்.


   அரசுப்பள்ளிகளை நம்பி குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்களின் நம்பிக்கையை முழுமையாக்க Need post அனைத்தையும் முழுமையாக நிரப்ப கலந்தாய்வில் அரசு ஆவன செய்ய வேண்டும். 


   பள்ளிக் கல்வித் துறையில் staff fixation மூலம் Need post அனுமதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு  உபரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பியதுடன், மாணவர்களின் கல்வி நலன் கருதி  இயக்குநர் தொகுப்பில் இருந்தும் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.(தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க. எண்: 040678 / சி3/ இ1/ 2021 நாள்: 13/01/2022.)


அதனைப் போல தொடக்கக் கல்வித் துறையிலும் Need Post பணியிடங்களுக்கு இயக்குநரின்  பொதுத் தொகுப்பில் இருந்தோ அல்லது அரசின் அனுமதி பெற்றோ ஆசிரியர்கள் கலந்தாய்வில் அனுமதிக்கப்பட்டு  நியமிக்கப்பட  வேண்டும்.

6 comments:

  1. என்னடா கொடுமை இது

    ReplyDelete
  2. Pg, bt கவுன்சிலிங் எப்போது நடக்கும்

    ReplyDelete
  3. ஐயா,பள்ளிக்கல்வி துறையில் கட்டாய பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து இடம் மாறுதல் பெற்ற ஆசிரியரகளுக்கு முன்னுரிமை வழங்க படாமல் அலைகழிப்பது ஏன்?

    ReplyDelete
  4. Yet staff fixation not given Thanjavur especially aided school in last three years. How they are working

    ReplyDelete
  5. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    ReplyDelete
  6. DSE kku transfer counselling yeppo sir. Pls tell .. we also suffered from past 5 years. Pls conduct PG transfer counselling immediately
    Withdraw the case and conduct soon... We suffered physically and mentally .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி