IT 2022 - தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2022

IT 2022 - தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள் :

 

IT Clarification - 2022

நண்பர்களே வணக்கம் ...... 


ஜனவரி " , பிப்ர " வரி " மாதத்தில் வழக்கமாக பரபரப்பாக இருப்பீர்கள் இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பு பதவி உயர்வு , மற்றும் பணி மாறுதல் - கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ...


 24.02.2022 அன்று தான் பணி விடுவிப்பு ? அப்படி எனில் வருமான வரி பிடித்தம் ( Income Tax Deduction ) என்ன செய்வது ? எப்படி செய்வது ? 

இந்த கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கிலேயே இந்த பதிவு . க.செல்வக்குமார் ஆகிய நான் தங்களைப்போல அரசுப்பள்ளி ஆசிரியரே வருமானவரித் துறை நிபுணரோ , பட்டயக் கணக்காயரோ அல்ல . தெரிந்தத் தகவலைப் பதிவு செய்கிறேன் . தெரியாததைக் கற்றுக் கொள்கிறேன் . நன்றி 


1 ) பிப்ரவரி மாத ஊதியம் இப்போது உள்ள பணியிடத்தில் பெறுவத ? அல்லது புதிய இடத்தில் சென்று பெற்றுக் கொள்வதா ? 

தற்போதைய பணியிடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் அது தான் சிறந்நது . புதிய பணியிடத்தில் சென்று ஊதியம் பெறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது . 


2 ) பிப்ரவரி மாத முழு ஊதியத்தையும் ( 28 நாள்கள் ) இங்கேயே பெறுவதா ? அல்லது 24 நாள்கள் ஊதியத்தை மட்டும் இங்கே பெறுவதா ? 


பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டி பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் . முழு ஊதியம் ( 28 நாள்கள் ) இப்போதையப் பணியிடத்திலேயே பெற்றுக்கொள்ளுங்கள் . எனக்குத் தெரிந்தவரை IFHRMS இல் 24 நாள்கள் ஊதியம் மட்டும் எனத் தனியாக ( Partial Pay ) பெற இயலாது . பழைய ATBPS / E - PAYROLL Partial Pay என்ற option இருந்துது . IFHRMS இல் விடுப்பு / absent எனில் மட்டுமே பகுதிச் சம்பளம் தயாரிக்க இயலும் . 


3 ) இப்போதைய பணியிடத்தில் வருமானவரி படிவம் சமர்ப்பிக்கும் போது பிப்ரவரி 24 வரை உள்ள ஊதியத்தை மட்டும் காண்பித்து வரி கணக்கீடு செய்ய வேண்டுமா ? அல்லது பிப்ரவரி 28 வரை முழு ஊதியத்திற்கு கணக்கீடு செய்யவேண்டுமா ? 

முழுமையாக 01.04.2021 முதல் 31.03.2022 வரை ( நமக்கு 28.02.2022 வரை ) உள்ள மொத்த வருமானத்தைக் கணக்கீட்டுத் தற்போதையப் பணியிடத்தில் மொத்த வரித் தொகையை பிப்ரவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்வது தான் சரியாக இருக்கும் . 


4 ) பிப்ரவரி முழுச் சம்பளம் இந்த பணியிடத்தில் பெறுவதால் LPC இல் பிப்ரவரி 28 வரை காண்பித்து - புதிய பணியிடத்தில் மார்ச் மாதத்தில் இருந்து ( ஏப்ரல் 1 ற்கு பிறகு ) சம்பளம் பெற்றுக் கொள்ளலாமா ? 


இல்லை - அது சரியல்ல பிப்ரவரி 25-28 கூடுதலாக பெற்ற நான்கு நாட்கள் சம்பளத்தை அரசுக்கணக்கில் செலுத்திட வேண்டும் . புதிய பணியிடத்தில் தான் அந்த நான்கு நாட்கள் ஊதியத்தைப் பெறவேண்டும் . 


5 ) எனக்கு பணி மாறுதல் தான் , புதிய - பழைய பணிடத்தில் ஒரே மாதிரியான கணக்கு தலைப்பு மற்றும் அதே ஊதியம் தான் , அப்படி இருக்கையில் நானும் அந்த நான்கு நாள்கள் ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டுமா ?

ஆம் - கட்டாயமாக . பணிமாறுதல் பெறும் எல்லோரும் அதற்குரிய தொகையை அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும் . அதே தொகையினை புதிய பணிடத்தில் பெற்றுக் கொள்ளலாம் .


 6 ) சரி - நான்கு நாள் ஊதியத்தை திருப்பிச் செலுத்துவது என முடிவாகிவிட்டது , நான் இப்போதைய பணியிடத்தில் பிப்ரவரி 24 பணிவிடுப்பிற்கு முன்னரே கரூவூலத்தில் சென்று அந்த நான்கு நாள்கள் ஊதியத்தைச் செலுத்தி சலானை தலைமை ஆசிரியரிடம் வழங்கி விடலாமா ?


 இதில் அறிந்து கொள்ளவேண்டிய விடயம் இரண்டு உள்ளது . 

1 ) பிப்ரவரி 28 தான் தங்களுக்கு மாத ஊதியம் கணக்கில் வரவு செய்யப்படும் . பணம் பெறுவதற்கு முன்பே அந்த 4 நாள்கள் ஊதியத்தை தற்போது அரசுக் கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை . 

2 ) IFHRMS நடைமுறைக்கு பிறகு கரூவூலத்திற்குச் சென்று சலான் நிரப்பி S.T.O Round Seal அடித்து SBI இல் சென்று மதியம் 2 மணிக்குள் பணம் செலுத்தும் பழைய நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டது . தற்போது அனைத்தும் E - Challan payment முறைதான் . கரூவூலம் செல்ல வேண்டிய தேவை இல்லை . 


7 ) பிப்ரவரி 28 க்கு பிறகு தான் பணத்தை திருப்பி செலுத்தும் நிலையில் அந்த தொகையை கணக்கிட்டு - ரொக்கமாக இப்போதைய பள்ளி இளநிலை உதவியாளர் / தலைமை ஆசிரியர் / IFHRMS BILL தயாரிக்கும் ஆசிரியரிடம் வழங்கிவிடவா ? 


தேவையில்லை அவர்களுக்கு எதற்கு சிரமம் . நீங்களே உங்கள் வீட்டில் இருந்தே எந்த மாவட்டத்தில் இருந்தாலும் IFHRMS - E - Challan மூலம் தொகையை செலுத்தி விடலாம் . ONLINE mode payment உள்ளது . NET BANKING வசதி இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை . தங்களின் ATM card மூலம் பணம் செலுத்தி விடமுடியும் . பாதுகாப்பானது மற்றும் எளிதானது . 


8 ) online payment எனக்கு அச்சத்தைத் தருகிறது மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா ? 


IFHRMS - E - Challan online இல் தான் எடுக்க வேண்டும் ஆனால் பணம் செலுத்திட Online / Offline என இரு வழிகள் உள்ளது . E - Challan entry போதே payment method - offline என குறிப்பிட்டால் - இரண்டு நகல் வரும் - வங்கிக்கு சென்று தொகையினை செலுத்தும் போது ஒன்றை அவர்கள் வைத்துக் கொண்டு மற்றொன்றை Bank Seal அடித்து நம்மிடம் வழங்கிவிடுவார்கள் . 


9 ) IFHRMS E - CHALLAN பள்ளி இளநிலை உதவியாளர் அல்லது தலைமை ஆசிரியர் ( Initiator or Approver ) login Id வழியாகத்தான் சென்று பணம் செலுத்த வேண்டுமா ? 


தேவையில்லை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களுக்கும் IFHRMS employee id உள்ளது . உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் - அலுவலர்களுக்கு 4303 எனத் துவங்கும் 11 இலக்க IFHRMS employee Id உள்ளது . அதன் வழியே உள்ளே சென்று தங்களின் 4 நாள்கள் ஊதியத்தை அரசுக் கணக்கில் நீங்களே செலுத்தலாம் . 


10 ) IFHRMS இல் எப்படி e - challan செலுத்துவது ? 


மன்னிக்கவும் - அது சார்ந்து பல நண்பர்கள் பதிவுகள் மற்றும் you tube videos உள்ளது . பிப்ரவரி வருமான வரிச் சந்தேகங்கள் - கேள்வியும் நானே - பதிலும் நானே - என்ற இந்தப் பதிவு IFHRMS சார்ந்தப் பதிவாக மாறுகிறதோ என்ற நிலையில் நிறுத்திக் கொள்கிறேன் . IFHRMS - சுத்திக்கிட்டே இருக்கு எனப் பலர் வருத்தப்படும் நிலையில் அதை கையாளும் ஒருவனாக எனது நிலைப்பாடு - IFHRMS - SUPER - கற்றுக் கொண்டால் நீங்களும் அருமை என கூறுவீர்கள் . 


11 ) புதிய பணியிடத்தில் அந்த 4 நாள்கள் ஊதியம் மார்ச் மாதத்தில் பெறலாமா ? அல்லது நிதியாண்டு நிறைவு காரணமாக 2022 ஏப்ரலில் தான் பெற இயலுமா ?


 வருமானவரி சட்டத்தின் படி நிதியாண்டு என்பது 01.04.2021 முதல் 31.03.2022 வரை எனவே நாம் 31.03.2022 க்கு முன்பே அந்த 4 நாள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம் எந்த ஒரு தடையும் இல்லை . 


12 ) புதிய பணிடத்தில் அந்த 4 நாள்கள் ஊதியம் பெற்றிட LPC மட்டும் போதுமா ? I.T Statement மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா ? 


HRA - CCA - HILL ALLOWANCE மாறாத நிலையில் LPC , E - Challan மட்டும் போதுமானது ஏற்கனவே பிப்ரவரி 28 வரை அனைத்து வருமானத்தையும் கணக்கில் காட்டி வருமானவரி பிடித்தம் செய்து பழைய பணியிடத்தில் செலுத்தி விட்டதால் புதியப் பணியிடத்தில் மீண்டும் வருமானவரிப் படிவம் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை - ஏற்கனவே வருமானவரிப் படிவம் கணக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது எனச் சான்றிதழ் மட்டும் அளித்தால் போதுமானது .


 13 ) அந்த நான்கு நாள்கள் புதிய பணியிடத்தில் HRA - CCA- HILL ALLOWANCE மாறுகின்ற நிலையில் என்ன செய்வது ?


 பழைய பணியிடத்தில் அதிகம் . புதிய பணியிடத்தில் குறைவு எனில் மீண்டும் Income tax calculation sheet தயாரிக்க வேண்டாம் . தனிநபர் வருமான வரி விவரம் தாக்கல் செய்யும் போது Individual I.T.R -1 ( may - 2022 - july - 2022 ) சமர்பித்து refund பெற்றுக் கொள்ளலாம் சிறிய தொகை தான் . பழைய பணியிடத்தில் குறைவு - புதிய பணியிடத்தில் அதிகம் எனில் மீண்டும் Income tax calculation sheet தயாரித்து கூடுதல் வருமானத்திற்கு ( மிகக் குறைந்த தொகை தான் இருப்பினும் ) வருமானவரியை Income Tax Challan 280/281 மூலம் செலுத்திவிடலாம் . 


வருமானவரிப் பிடித்தம் சார்ந்த சில தகவல்கள் : 


1 ) வீட்டுக் கடன் வட்டி / அசல் கழித்துக் கொள்கிறேன் . இப்போது வீட்டு வாடகை தொகை ( HRA ) உம் சேர்ந்து கழித்துக் கொள்ளலாம் என புது அரசாணை எதுவும் வந்துள்ளதா ? Home Loan and HRA both deduction allowed ?


 புதிய விதி எதுவும் வரவில்லை - ஏற்கனவே உள்ள நடைமுறைதான் ஆனால் உங்கள் சொந்த வீடு வேறு இடத்தில் / ஊரில் உள்ளது . வாடகைக்கு விடவில்லை குடும்ப உறுப்பினர்கள் தான் அதில் தங்கியுள்ளனர் . நீங்கள் வேறு இடத்தில் வாடகை வீட்டில் இருந்தால் இரண்டும் கழித்துக் கொள்ளலாம் தடையேதும் இல்லை . சொந்த வீட்டில் நீங்கள் இருந்து கொண்டு - வாடகை வீட்டில் இருப்பதாக சொல்லி Home Loan and HRA both deduction தார்மீக ரீதியில் சரியாக இருக்காது . 


2 ) HRA - வீட்டு வாடகை இரசீது கட்டாயம் வைக்க வேண்டுமா ? வீட்டு உரிமையாளர் PAN card Xerox பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம் எல்லோரும் சமர்ப்பிக்க வேண்டுமா ? 


ஆம் -HRA - கழித்தால் வீட்டு வாடகை இரசீது கட்டாயம் வைக்க வேண்டும் . ஆனால் நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை ஆண்டிற்கு 1 இலட்சத்திற்கு மேல் எனில் ( மாதம் 8333 க்கு மேல் ) கட்டாயம் வீட்டு உரிமையாளர் PAN card / Adhar card Xerox இணைக்க வேண்டும் . 


3 ) தற்போது வருமானவரி பிடித்தம் முழுப் பொறுப்பு பணம் பெற்று வழங்கும் அலுவலர் அதாவது தலைமை ஆசிரியர் தானே , எதுவும் கரூவூலம் செல்லப்போவது இல்லை எனவே யாராவது தெரிந்த நபரின் PAN card Xerox கொடுத்தால் என்ன ? 


இது சரியல்ல - பணம் பெற்று வழங்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர் ஏப்ரல் 30 க்குள் 24Q எனப்படும் e - filing Q4 ( Fourth quarter e - filing ) சமர்ப்பிக்கும் போது அதில் வாடகை 1 இலட்சத்திற்கு மேல் எனில் House owner PAN / Adhar கேட்கும் அப்படி வழங்கும் போது அந்த நபரின் ( PAN Xerox கொடுத்தவர் ) வருமானத்தில் இந்த வாடகைத் தொகை தானக ஏறிவிட வாய்ப்பு உள்ளது . எனவே PAN Xerox கொடுக்கும் போது கவனம் . 


4 ) Standard Deduction - 50,000 orduBour ( 1545b 2 dorm ? 


ஆம் வருமான வரி பழைய முறை ( Old Regime ) விருப்பம் தெரிவித்துள்ள அனைவருக்கும் Standard Deduction - 50.000 உண்டு . 


5 ) CPS பணியாளர்கள் கூடுதலாக 50,000 கழித்துக் கொள்ளலாமா ? எந்த பிரிவு ?


 உண்மை என்னவெனில் நாம் ( தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 01.04.2003 க்கு பிறகு ) சந்தா செலுத்தும் CPS என்று அழைக்கப்படும் திட்டம் மத்திய அரசு / ஒன்றிய அரசு வரையறுத்துள்ள NPS திட்டத்தின் கீழ் வராது தமிழகம் இன்றுவரை PFRDA வில் இணையவில்லை . இருப்பினும் மாநில அரசிற்கு தான் நமது சந்தா பிடித்தம் செல்கிறது என்ற அடிப்படையில் நாம் நமது சந்தா தொகையினை 80 C இல் கழித்துக் கொள்கிறோம் . மத்திய அரசு / ஒன்றிய அரசு வரையறுத்துள்ள NPS திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் கூடுதலாக பிரிவு 80CCD ( 1B ) இல் 50,000 வரை கழித்துக் கொள்ளலாம் . நாமும் இதே பிரிவின் கீழ் தான் U / S 80CCD ( 1B ) இல் 50,000 வரை கழித்துக் கொள்கிறோம் . 


6 ) GPF - பணியாளர்கள் இந்த சலுகையினை பெற இயலுமா ? 


ஆம் இயலும் – அவர்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியை அணுகி N.P.S - Tler | Account Open செய்து PRAN Number பெற்று ஆண்டிற்கு 50,000 வரை செலுத்தி U / S 80CCD ( 1B ) இல் வருமான வரி சலுகை பெறலாம் . ( 30 % - Tax Slab இல் இருப்பவர்களுக்கு 15,000 + 4 % வரி மிச்சமாகும் )


7 ) 80 C இல் கவனிக்கவேண்டியவை ஏதேனும் இருக்கிறதா ? 

பொதுவாக இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவும் இல்லை . 

அதிகபட்சம் 1,50,000 . 

a ) Post Office R.D - 80 C இல் கிடையாது . 

b ) LIC / MF / ULP -சந்தா தொகை 01.04.2021 முதல் 31.03.2022 செலுத்தியவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் . சிலர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2021 வருமானவரி கணக்கு முடித்த பிறகு மார்ச் 2021 இல் சந்தா செலுத்தி இருப்பார்கள் - கடந்த ஆண்டு வருமானவரி கணக்கில் இந்த தொகை நான் காட்டவில்லை இப்போது தான் காட்டுகிறேன் என்றால் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் வருமானவரி விதிப்படி ஏற்றுக் கொள்ள இயலாது . அதாவது மார்ச் 2021 என்பது கடந்த நிதியாண்டு . 01.04.2021 முதல் தான் இந்த நிதியாண்டு துவங்குகிறது . Home Loan க்கும் இது பொருந்தும் . 

c ) குழந்தைகளின் கல்வி நிலையத்தில் செலுத்தும் மொத்த தொகையினை அப்படியே இப்பிரிவில் காட்டக்கூடாது , அத்தத் தொகையில் Tution Fees எவ்வளவு உள்ளதோ அதை மட்டுமே கழிக்க வேண்டும் . இரசீதில் Tultion Fees என்ற வார்த்தை இல்லை எனில் அதை 80 C இல் காண்பிக்க இயலாது . 


8 ) 80 D , 80 DD , 80 DDB குழப்பமாக உள்ளதே ? இவை 1,50,000 க்குள் அடங்கும் பிரிவா ? 


இல்லை - இவைகள் ( 80 C ) 1,50,000 க்குள் மேல் கழித்துக் கொள்ள இயலும் பிரிவின் கீழ் வருகிறது . மூன்றும் " மருத்துவம் / உடல்நலம் " சார்ந்த செலவுகள் என்பதால் நீங்கள் சற்று குழப்பம் அடையலாம் . ஆனால் மூன்றும் தனித்தன்மை வாய்ந்தவைகள் . 

a ) 80 D Health / Medical Insurance Policy premium payment - deduction நமது NHIS - 2021 திட்டத்தில் செலுத்தும் சந்தா தொகையினை இதில் கழித்துக் கொள்ளலாம் . 

b ) தனியார் - அரசு காப்பீட்டு நிறுவனங்களில் Health / Medical Insurance பாலிசி எடுத்து இருந்தால் ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ 25000 வரை இத்திட்டத்தில் நீங்கள் கழித்துக் கொள்ளலாம் . 

c ) 60 வயதிற்கு குறைவான பெற்றோர்களுக்கு சேர்த்து நீங்கள் பாலிசி எடுத்து இருந்தால் அதிகபட்சம் ரூ 50,000 வரை கழித்துக் கொள்ளலாம் . 60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களுக்கு சேர்த்து நீங்கள் பாலிசி எடுத்து இருந்தால் அதிகபட்சம் ரூ 1,00,000 வரை கழித்துக் கொள்ளலாம் . 


9 ) NHIS2021 இல் பெற்றோர் கிடையாது என்றீர்கள் , இப்போது பெற்றோருக்கும் சேர்த்து பாலிசி என்கிறீர்கள் ? 


ஆம் NHIS2021 இல் பெற்றோர் கிடையாது- ஆனால் தனியார் - அரசு காப்பீட்டு நிறுவனங்களில் Health / Medical Insurance பாலிசி எடுக்கும் போது பெற்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குத் தகுந்தவாறு பிரிமீயம் அதிகமாக இருக்கும் . 


10 ) 80DD ? 

தங்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவிற்காக ஆண்டிற்கு ரூ 75,0000 ( 40 -80 சதவீத ஊனம் எனில் ) ரூ 1,25,000 ( 80 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊனம் எனில் ) இந்த பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம் . Fixed Amount - Disability certificate required from prescribed medical authority . 


11 ) 80 U பிரிவும் இது தானே ? 


இல்லை - அந்த பணியாளரே மாற்றுத்திறனாளி எனில் 80 U பிரிவு . பணியாளர் குடும்ப உறுப்பினர் மாற்றுத்திறனாளி எனில் 8ODD பிரிவு - தொகை இரண்டிற்கும் ஒன்று தான் . உடல் ஊனத்தின் அடிப்படையில் தொகை மாறுபடுகிறது . 40 சதவீதற்கு கீழ் உடல் ஊனம் எனில் சலுகை கோரமுடியாது . 


(12 ) அப்ப 8ODDB என்ன ? 


பணியாளர் அல்லது அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினை இந்த பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம் . அதிக பட்சம் ரூ 40,000 குடும்ப உறுப்பினர் 60 வயதிற்கு மேற்பட்டவர் எனில் அதிகபட்சம் ரூ 1,00,000 வரை கழித்துக் கொள்ளலாம் . 


13 ) இந்த பெருந்தொற்று காலத்தில் பலர் கொரோணா சிகிச்சைக்கு இலட்சக் கணக்கில் செலவு செய்துள்ளார்கள் அப்படி எனில் அந்த செலவுத் தொகையை 80DDB இல் கழித்துக் கொள்ளலாமா ?


 மன்னிக்கவும் - இயலாது ஏனெனில் எல்லா மருத்துவ செலவுகளுக்கும் இந்த திட்டத்தில் அனுமதி இல்லை 


14 ) 80 D Vs 80 DDB ? 


80 D 80DDB - வருமுன் காக்க செய்யும் செலவு - வந்த பின் காக்க செய்யும் செலவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு ) . 


15 ) 80G - எல்லா நன்கொடை தொகையையும் அனுமதிக்கலாமா ?


 தேசிய நிதி - பிரதமர் பாதுகாப்பு நிதி - தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி போன்ற மத்திய / ஒன்றிய / மாநில அரசுகளுக்கு செலுத்தப்படும் நிதியினை 100 % முழுமையாக கழித்துக் கொள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர் அனுமதிக்கலாம் தடையேதுவும் இல்லை . தனியார் அறக்கட்டளை / தொண்டு நிறுவனங்கள் / சமயம் சார்ந்த அமைப்புகளுக்கு செலுத்தும் நன்கொடையினை பொறுத்தவரையில் ??????????


கொரோணாவிற்கு முந்தைய காலத்தில் 3-4 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட தலைநகரில் ஒரு பெண்கள் கல்லூரியில் வைத்து மதுரை மண்டல வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான TDS / TCS சாந்த விளக்க கூட்டம் நடைபெற்றது அதில் அவர்கள் கூறிய கருத்தை தங்களுக்கு பதிவு செய்கிறேன் . DDO'S 80 G Government Contribution எனில் allow செய்யுங்கள் . Other than Govt Contribution like Trust Donation எனில் உங்கள் நிலையில் அதை அனுமதிக்க கூடாது . எனில் எல்லோருக்கும் 100 சதவீத கழிவு கிடையாது . % மாறுபடும் அதே போல் அந்த நிறுவனம் வருமானவரித்துறையில் நன்கொடை பெற அனுமதி பெற்றுள்ளதா ? என்ற விவரம் உங்களுக்கு தெரியாது ? வருமானவரித்துறையும் நிரந்தர அனுமதி வழங்குவது கிடையாது . நன்கொடை வசூல் செய்ய அனுமதியை புதுப்பித்துள்ளார்களா ? என்ற விவரங்களை நீங்கள் உங்கள் நிலையில் சரிபார்க்க இயலாது . எனவே அப்படி தொண்டு நிறுவனங்களுக்கு செலுத்திய நன்கொடைக்குரிய வருமான வரிச்சலுகையினை அந்த தனிநபர் Income Tax Retum -1 e - filling செய்யும் போது காண்பித்து refund பெற்றுக் கொள்ளலாம் . எனது தனிப்பட்ட கருத்து - Government Donation - 80 G - No Issues - HM / DDO can allow Trust Donation 80 G பொறுத்தவரையில் தனிநபர் individual e - filing I.T.R தாக்கல் செய்யும் போது Refund பெற்றுக் கொள்ளட்டும். பணம் பெற்று வழங்கும் அலுவலர் நிலையில் அதை அனுமதிப்பது சரியாக இருக்குமா என தெரியவில்லை . நான் பதிவு செய்துள்ள கருத்துக்கள் - எனக்குத் தெரிந்த அளித்துள்ளேன் . தவறுகள் / திருத்தங்கள் தேவை எனில் பகிரலாம் -திருத்திக் கொள்வோம் . 


IT Clarification - 2022 ( pdf) - Download here...

நன்றி :

 திரு க.செல்வக்குமார் 

முதுகலை வேதியியல் ஆசிரியர் 

நகராட்சி ’ மேல்நிலைப் பள்ளி மேலக்காந்திநகர் சாத்துார் -626203 

விருதுநகர் மாவட்டம் .

 Selva7pc@gmail.com - 

2 comments:

  1. 80DDB-யில் சிலர் எந்த ஆவணமும் இல்லாமல் ரு 40000 கழிக்கிறார்கள்...இது சரியா செல்வகுமார் அய்யா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி