PGTRB EXAM - மைய ஒதுகீட்டில் தொடரும் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2022

PGTRB EXAM - மைய ஒதுகீட்டில் தொடரும் குழப்பம்

 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 12ம் தேதி துவங்கவுள்ளது. பாடவாரியாக தேர்வுகள், 20ம் தேதி வரை காலை, மதியம் இரண்டு அமர்வுகளில் நடக்கவுள்ளன. இந்நிலையில், தேர்வர்களுக்கு சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் மையங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக, பெண் தேர்வர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை, 7:30 மணிக்கே வர அறிவுறுத்தப்பட்டுள்ளதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தேர்வர் லதா கூறுகையில், ''கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த எனக்கு சேலத்தில் மையம் ஒதுக்கியுள்ளனர். சக தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, நாமக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சம்மந்தம் இல்லாமல், தேர்வு மையங்கள் அனைவருக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் தேர்வு மையத்திற்கும் வரவேண்டிய நேரம், 7:30 என்றும், 8:15 மணிக்கு மேல் ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.


அதுவும், 12ம் தேதி தேர்வுக்கு, மாவட்டம் மட்டும் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மையத்தின் பெயர் ஒதுக்கி, நுழைவுச்சீட்டு இனிமேல் தான் ஒதுக்கப்படும். புதிய இடத்தில் பெண்கள் தனியாக, முந்தைய நாள் சென்று தங்கி தேர்வு எழுதவேண்டும்; இதில் பாதுகாப்பு எங்கு உள்ளது.


சொந்த ஊரில் மையங்கள் ஒதுக்க இடம் இருக்கையில், தேர்வர்களை அலைக்கழிப்பது சரியல்ல. அதிகாரிகள் உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குள் மையங்களை ஒதுக்கி நுழைவுச்சீட்டு வெளியிடவேண்டும்,'' என்றார்

21 comments:

  1. இனி வரும் காலங்களில் மோசடிகளை தவிர்க்க அருகாமை கிரகங்களில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. உலக அளவில் மையம் அமைப்பதும் சிறந்த ஓர் சிந்தனை 👍👍👍👍

    ReplyDelete
  3. Same issue enakum.morning exam travel time 5 Hours night angaiye stay pannal mattume morning time ku atten panna mudiyum. Enna pannanu onnum puriyavillai .very worst trb and goverment also.no response trb . Yarum kanduga kuda matturaga ellam election busy la erugaga.enga issue pesa kuda aal ellai . Padithallam waste pola kadasi time la roomba tensan paduthuraga . Negalavathu engaluku entha issue erukunu pottigale thanks kalvi seithi .media kklam election pathi pesa mattume time eruku vote podura makkal pathi kavala ellai yarukum .very very worst trb .number reach agala .16 th csir net exam.18 th MED exam same date .very very worst trb

    ReplyDelete
  4. சார் இதற்கு ஒரே தீர்வு 2012,2013,2015,2017 போன்ற ஆண்டுகளில் நடந்த OMR SHEET பழைய தேர்வு முறைதான் ஒரே தீர்வு மேலும் அவ்வாறு தேர்வு அமைந்தால் நம் சகோதரிகளும் நாமும் வேறு மாவட்டத்திற்கு சென்று தேர்வெழுதும் நிலை இருக்காது இது நடக்குமா TRB வாரியம் இந்த பிரச்சனைக்கு எவ்வித தீர்வு காணும் என்று பார்ப்போம்

    ReplyDelete
  5. Beo result mathri special teachers kum posting increas pannunga

    ReplyDelete
  6. Very very worst trb and goverment.
    Election Election nu erugaga .Exam centre problem la erukuravaga yarum vote pannathiga appa theriyum .Engana bus stnadla poi stay panni morning exam ku poganum pola.very very worst trb.

    ReplyDelete
  7. உங்களுடைய கோரிக்கை நியாயமானது.

    ReplyDelete
  8. சேலத்து தேர்வர்களுக்கு கோயம்புத்தூரில் தேர்வு மையம்

    ReplyDelete
  9. Chennai people got center in chengslpatttu district.

    ReplyDelete
    Replies
    1. Chennai commerce candidate's exam district is Chengalpat but center is in Coimbatore

      Delete
  10. 12 th feb Commerce exam venue hall ticket not yet published.Any friends
    Please clarify.

    ReplyDelete
    Replies
    1. Commerce hall ticket with venue
      has been published.

      Delete
  11. Physics Hall ticket not yet published any friends please clarify

    ReplyDelete
  12. Maths ku district hall ticket enaku varavillai..whhether trb published it?

    ReplyDelete
  13. For maths hall ticket published

    ReplyDelete
  14. Padigava ella hall ticket open panni pathude eruganuma.entha trb mela yarum case kuda poda matturaga .evlo manaulachalil entha exam m atten pannathe ella .

    ReplyDelete
  15. இப்படியெல்லாம் எக்ஸாம் வச்சாதான் நேர்மையா நடக்குதுன்னு நாம நெனச்சுகுவமாம்

    ReplyDelete
  16. சார் கணினி வழி தேர்வு என்பதால்தான் இத்தனை இடர்பாடுகள் பேசாம பழைய OMR SHEET தேர்வு முறையாக இருந்தால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் தேர்வு நடத்தலாம் போதிய கணினி வசதி இல்லாததால் தான் இத்தனை பிரச்சனையும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி