பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி!

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் பெருத்த குளறுபடி என பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை! 


நேற்று முதல் இன்று தற்போது வரை நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE)  கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் முன்னுரிமை இல்லாத பலருக்கு தற்போது முன்னுரிமை என்று இன்று வந்திருக்கிறது... உதாரணமாக ஆங்கில பாடத்தில் 10180708 எண் கொண்ட ஒரு ஆசிரியருக்கும் இன்னும் சில ஆண் ஆசிரியர்களுக்கும் இறுதிப் பட்டியல் என்று ஒன்று வெளிவந்த போது முன்னுரிமை எதுவும் இல்லை என்று இருந்தது ஆனால் இன்று வந்த பட்டியலில் அந்த ஆண் ஆசிரியருக்கு இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்துள்ளது... 


இது அதிக அளவிலான குளறுபடி ஏற்படுத்தும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

5 comments:

 1. Transfer vangitey poitanga ippo vanthu sollunga

  ReplyDelete
 2. star ஹோட்டலில் பணி புரியும் ஒருவருடைய மனைவி (ஆசிரியை) தான் ராணுவ வீரரின் மனைவி என்று சான்று பெற்று அறிவியல் பாடத்தில் ரேங்க் 3000 கு மேல் இருந்தவர் 300 குள் வந்து தனது சொந்த மாவட்டம் coiambatore கு மாறுதல் வாங்கியிருக்கிறார். இதற்கு கல்வி துறை என்ன பதில் சொல்ல போகிறது..

  ReplyDelete
 3. இது போன்ற கலந்தாய்வு இதுவரை நடந்ததில்லை.அனைத்திலும் குளறுபடிகள்.பலர் குறைவான பணிமூப்பு இருந்தபோதும் தனது சொந்த மாவட்டம் சென்றுவிட்டனர்.பாவம் ஆசிரியர்கள்.அதுவும் பெண் ஆசிரியர்கள்.மூன்று நாட்களாகியும் இன்னும் கலந்தாய்வு முடியவில்லை.இதுதான் திட்டமிட்ட கலந்தாய்வா?மூன்று நாட்களுக்கு மாற்று பணியும் இல்லை.அநாதையாக நிற்கின்றோம்.மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களே உதயச்சந்திரன் போன்ற நேர்மறையான கண்ணியமிக்க அதிகாரிகளை பள்ளி கல்வித்துறைக்கு தாருங்கள் ஐயா.அப்போதுதான் நல்ல மாற்றம் வரும்.

  ReplyDelete
 4. நிழலின் அருமை (ஐயா, உதயச்சந்திரனின் பெருமை) வெயிலில் புரியும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி