தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை விடபடுமா? மாவட்ட ஆட்சித்தலைவர் பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை விடபடுமா? மாவட்ட ஆட்சித்தலைவர் பதில்.

 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை விடபடுமா என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பதிலளித்துள்ளார்.


தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் அய்யனார்,  சுடலைமாடசாமி உள்ளிட்ட பல்வேறு சாஸ்தா கோவில்கள் உள்ளன.பங்குனி உத்திர திருவிழா நாளில் தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு குலதெய்வ கோவிலுக்கு மக்கள் சென்று தங்கள் குலதெய்வத்தை வழிபடுவார்கள். இதற்காக சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து கோவில்களில் பெங்கலிட்டு, முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்வதுடன் சாமியை வணங்கி செல்வார்கள்.


ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வத்தை  வழிபடுவதன் மூலம் குடும்பத்தின் வாழ்வு விருக்தி அடையும் என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள். இதங்காக திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரநாளை முன்னிட்டு நாளை உள்ளுர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான பொது மக்களிடம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள உள்ளுர் விடுமுறை தினத்திற்கான பட்டியலை வெளியிட்டார்.


அதன்பட தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் விழாக்களுக்கு மட்டுமே பொறுந்தும் என அவர் தெரிவித்துள்ளார். *எனவே பங்குனி உத்திர திருநாளான நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை இல்லை* என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி