' ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தனி உத்தரவு ’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2022

' ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தனி உத்தரவு ’

திருச்சி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தன்னை கண்டித்த ஆசிரியரை பள்ளி மாணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாத வகையில் விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


 திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : 


பெரியகுளம் சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்துள்ளோம். எங்களுக்கு மாணவர்களும் முக்கியம் , ஆசிரியர்களும் முக்கியம். இதுபோன்று மாணவர்கள் தவறு செய்யும்போது , அதைக் கண்டிக்கக்கூடிய வகையில்தான் எங்கள் செயல்பாடு இருக்கும். பெரியகுளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மீண்டும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் , இதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.


பள்ளி மாணவர்கள் சீருடை அணிவது உட்பட பள்ளிக்கு எப்படி வர வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே சுற்றறிக்கை உள்ளது. தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சினை இல்லை வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கடைபிடிக்கிறோம்.


 அனைவரையும் சகோதரத்துவத்துடன்தான் பார்க்கிறோம் . ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கருத்துகளை காது கொடுத்து கேட்கிறோம். இதன் காரணமாகவே பிப் .28 - ம் தேதியுடன் முடிந் திருக்கவேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்னும் முடியவில்லை.


ஆசிரியர்கள் கூறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

8 comments:

  1. ஆசிரியர்களின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் எதுவும் காணவில்லை.இதனால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்
    சமூகம் பயப்படுகிறது.ஆகவேதான் சில மாணவர்களிடம் ஒழுக்கமின்மை வளர்ந்து வருகிறது.அரசு தக்க சட்டம் கொண்டு வந்தால்தான் ஆசிரியர்களுக்கு
    பாதுகாப்பு கிடைக்கும். மாணவர்களும் நல்லபடியாக படிப்பர்.

    ReplyDelete
  2. வரவேற்கிறோம்.நன்றி.

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களின் இடையே இம்மாதிரி சம்பவங்கள் நடப்பதற்கு முழுப் பொறுப்பு சமுதாயம் மற்றும் கட்சியும் காரணமாகும்.

    ReplyDelete
  4. Yes true. Govt always support only to students.

    ReplyDelete
  5. அரசுப் பள்ளியில் அமர்ந்து மது அருந்தும் குடிகார நாய்களின் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி அடங்கும்.. அடங்காத அடாவடி மாணவ பரட்டை தலையன்களை அடிக்கிற அடியில் ஜட்டியிலேயே வெளிக்கி வரும்படி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. அனைத்து அரசு பள்ளிகளிலும் "நீதி போதனைக் கல்வி" வகுப்பினைக் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். இதற்கெனத் தனியாக சிறப்பு ஆசிரியர்களை உடனடியாக நியமித்திட, புனிதமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறைகள் முன்வர வேண்டும்
    கவிஞர்
    ஜெ. இராமநாதன்
    புதிய வீட்டு வசதி வாரியம்
    சிவகாசி(மேற்கு)
    விருதுநகர் மாவட்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி