பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம்... சினிமா பாடல்களை போடக் கூடாது; அனைத்து பள்ளிகளுக்கும் அவசர உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2022

பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம்... சினிமா பாடல்களை போடக் கூடாது; அனைத்து பள்ளிகளுக்கும் அவசர உத்தரவு!

மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் ஆழ்வார்திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக, வேனை பின்நோக்கி இயக்கிய போது, 2ம் வகுப்பு மாணவன் ஒருவன் வாகனத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையின்படி,


பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி பேருந்து, வேன், ஆட்டோவில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்.பள்ளி வாகனங்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றக் கூடாது.மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு உதவியாளர் கட்டாயம் பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டும்.பள்ளி வாகனங்களை ஓட்டும் போது, சினிமா பாடல்களை போடக்கூடாது. 30 நிமிடத்திற்கு மேல் மாணவர் பயணிக்காத வகையில் வாகனங்களின் பயண தடத்தை அட்டவணையிடுங்கள்.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றுவதை பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச் செல்ல வேண்டாம் என்று ஆட்டோ, வேன், கார் ஓட்டுனர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்கக் கூடாது என்றும்  விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

1 comment:

  1. Unknown
    March 29, 2022 at 12:47 PM
    2009 சீனியாரிட்டி மற்றும் டெட் குழு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு மலை சுழற்சி வழக்கு என்னாச்சு...நீங்க செய்தி போட்டு 15 நாள் ஆச்சு....வழக்கு விசாரணைக்கு வந்ததா.....இன்று மற்றவர் நிலை கண்டு நகைப்பவர் நாளை தன் நிலை கண்டு வருந்துவர்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி