TRB - Polytechnic Lecturer Candidates - ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2022

TRB - Polytechnic Lecturer Candidates - ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.

 


 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. 

மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன . தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் , பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 18.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திட கூடுதல் கால விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.

 அவகாசம் கோரி எனவே , விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.03.2022 -லிருந்து 25.03.2022 ஆக நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.


 செய்யப்பட்டு மேலும் , விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் மற்ற கோரிக்கைகள் பரிசீலனை வருகின்றன . கோரிக்கைகளுக்கான உரிய பதில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

6 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியம் தலைமை லதா அம்மா அவர்களே சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் ,,,தமிழ் இட ஒதுக்கீடு செய்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் பணிநியமனம் செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அவர்கள் அனைவரும் தகுதிகாண் பருவம் முடிந்து,,,இரண்டு increment um வாங்கிவிட்டார்கள் ,,,ஆனால் தமிழ் இட ஓதுக்கீடுகளில் தேர்வு செய்தவர்களுக்கு கண்ணீர் மட்டும் மிச்சம்,,,,,இதை விட கொடுமை முதல் பட்டியலில் தேர்வு செய்தவர்களில் சிலரை சிறப்பாசிரியர்கள் list ல் இருந்து பெயரை தூக்கியது,,,,,,மிகவும் மனஉளைச்சலை கொடுத்தது,,,,ஆசிரியர் தேர்வு வாரியம் நிலையில் நாங்கள் பலமுறை யோசித்துப்பார்த்து உங்கள் கஷ்டத்தை உணர்ந்து பார்தோம்,,,,வழக்கு வழக்கு என்று தொடர்வதால் பாவம் நீங்கள் என்ன செய்ய முடியும் என்று?,,, ஆனால் நீங்கள் எங்களை யோசிப்பது இல்லையே,,2017 எழுதிய தேர்வுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யாமல் இருந்தால் எங்கள் நிலைமை எப்படி இருக்கும் என்று ஒரு முறை யோசித்து பாருங்கள்,, ஜூன் மாதம் புது கல்வி ஆண்டு திறப்பதற்குள் சிறப்பாசிரியர்கள் பற்றி தகவலை சொல்லுங்கள்,,,,உங்கள் காலில் வாழ்கிறோம்,,,,இப்படிக்கு பாதிக்கபட்ட சிறப்பாசிரியர்களில் ஒருவன்

    ReplyDelete
    Replies
    1. இதற்கு மேல் என்ன சொல்லுவது,, கடவுள் பார்த்துபார்

      Delete
    2. இங்கே கருத்து போட்டு ஒரு பலனும் இல்லை...

      Delete
    3. அது சரிதான்,,,but oru aaruthalukuthan send pannen

      Delete
    4. Poai Vera velaiya paru summa summa paragraph poatutu first part time teacher ku oru valiya solunga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி