பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கூடுதல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுமாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், 2021 டிச., 8 முதல் 12 வரை கணினி வழியில் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
எனவே, சம்பந்தப்பட்டதேர்வர்கள் ஏற்கனவே பதிவேற்றிய சான்றிதழ்களுடன், கூடுதல் சான்றிதழ்களையும் ஆன்லைன் வழியே பதிவேற்ற வேண்டும்.இளநிலை, முதுநிலை, எம்.பில்., பட்டப் படிப்பு தற்காலிக சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பிஎச்.டி., சான்றிதழ், நடத்தை சான்றிதழ், அரசு அதிகாரியிடம் பெறப்பட்ட சமீபத்திய நடத்தை சான்றிதழ் ஆகியவை பதிவேற்ற வேண்டும்
.ஆசிரியர் கற்பித்தல் அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவற்றை, இன்று முதல், 18ம் தேதிக்குள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றவேண்டும். பதிவேற்றப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பின்போது ஏற்கப்படும். பிற புதிய சான்றிதழ்கள் ஏற்கப்படாது. முழுமையான விபரங்கள் அளிக்காவிட்டால், தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படும். கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள, 94446 30068, 94446 30028 என்ற எண்களிலும்; trbpolytechnicgrievance19@gmail.com என்ற இ- - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
PGT response sheet when will you release?
ReplyDeleteDoes exam result comes only eligible candidates?
ReplyDeletehttps://t.me/TetSucc
ReplyDeleteடெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு இந்த டெலிகிராம் குழுவில் இணையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்💥💥💥💥💥💥💥💥💥Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in and we will continue to make the difference from you. #CancelGo149
Election manifesto 177. Executive. 🔥🔥🔥
Conduct certificate from the head of the Institution (last studied) ஏற்கனவே வாங்கியதைப் பயன்படுத்திக் கொள்ளலாமா? அல்லது புதிதாகப் பெற வேண்டுமா?
ReplyDeleteSame doubt sir?
Deleteபுதிதாகவே வாங்கிவிடுவோம்.
DeleteNot opened for me what should I do?
ReplyDeletePolytechnic physics eligible Mark or cutoff.who is upload the certificate.
ReplyDeleteYour marks
Delete