நிதித் துறை நிபந்தனையால் ஆசிரியர் சம்பளத்துக்கு சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2022

நிதித் துறை நிபந்தனையால் ஆசிரியர் சம்பளத்துக்கு சிக்கல்

 

இடமாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினருக்கு, மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நிதித் துறை, பள்ளிக் கல்வி துறை இடையே அரசாணை தொடர்பான பிரச்னையால், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடக்க பள்ளிகள் தவிர, மற்ற அரசு பள்ளிகளில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் இடம் மாற்றம் பெற்ற ஆசிரியர்களில் ஒரு தரப்பினருக்கு, கடந்த மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.அதாவது, அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ள இடங்களில், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த இடங்களுக்கு, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, பள்ளிகளில் கூடுதல் இடம் ஏற்படுத்தியதற்கான அரசாணையை சமர்ப்பிக்குமாறு, நிதித் துறையில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலாகநியமிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்டவை இல்லை என்பதால், அதற்கு பள்ளிக் கல்வி துறையால் புதிய அரசாணை பிறப்பிக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த பள்ளிகளில், கூடுதலாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அவை. அங்கு தேவையில்லை என்பதால், தேவையுள்ள பள்ளிகளுக்கு, அந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.பல ஆண்டுகளுக்கு முன், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் என்பதால், அதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி துறை தேடி வருகிறது. இந்த அரசாணை கிடைத்த பின்பே, நிதித் துறையில் இருந்து சம்பள அனுமதி பெற முடியும் என்பதால், பிரச்னை நீடித்து வருகிறது.

7 comments:

 1. ஏம்பா கல்விச்செய்தி Mbc admIn பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு சேர்ந்து நுங்களும் கூட இருந்தே தேடிநீங்களா.....என்ன ஒருதிமுரு இருந்தால் தேடிக்கொண்டிருக்கீறார்கள்னு பதிவிடுவாய்...ஒரு மாதச்சம்பளம் தாமதமாச்சுன்னா செத்தா போயிருவீங்க....

  ReplyDelete
 2. இர‌ண்டு மாத‌ம் ஆக‌ப் போகிற‌து..இதுவ‌ரை ச‌ம்ப‌ள‌ம் பெற‌வில்லை ..ஆசிரிய‌ர்க‌ள் தின‌மும் கையூட்டு பெற்றுக் கொண்டு வீடு திரும்புவ‌தில்லை...உழைத்த‌ற்கு கூலி கேட்க‌ நாங்க‌ள் ஏன் வெட்க‌ப்ப‌ட‌ வேண்டும்..
  மாத‌ ச‌ம்ப‌ள‌த்தைக் கொண்டு ம‌ட்டுமே எங்க‌ளின் நாட்க‌ள் ந‌க‌ர்கின்ற‌ன‌..வீட்டு லோன்,ப‌ர்ச‌ன‌ல் லோன் போன்ற‌வ‌ற்றை எடுத்துள்ள‌ ஆசிரிய‌ர்க‌ளின் வேத‌னை சொல்லி மாளாது...
  த‌ய‌வு செய்து அர‌சு க‌வ‌ன‌ம் செலுத்தி இப்பிர‌ச்சினையைத் தீர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
  பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ஆசிரிய‌ர்க‌ளில் ஒருவ‌ன்...

  ReplyDelete
  Replies
  1. பதிவு அருமை, எவரிடமும் லஞ்சம் வாங்கி குடும்பத்தை நடந்த வில்லை உழைத்து சம்பளம் வாங்குகிறோம் நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்

   Delete
 3. மிகவும் வேதனையாக உள்ளது ஒரு நாளைக்கு வண்டிக்கு பெட்ரோலுக்கு காசு இல்லாம நிலைமை உள்ளது மிகப்பெரிய வேதனை

  ReplyDelete
 4. சம்பளம் கொடுக்க உடனே அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும்...சாப்பாட்டுக்கே வழியில்லை காலை மாலை என இருவேலையும் பிச்சையெடுத்துத்தான் கடந்த 22நாட்களாக நாட்களைக் கடத்துகிறோம்....குறைந்தபச்ச்சம்பளமாக
  70000 வாங்கிக்கொண்டிருந்து விட்டுதற்போது கையறுநிலையில் உள்ளோம்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த‌வ‌ரின் வேத‌னையைப் பார்த்து ந‌கைக்கும் உங்க‌ளின் திமிருக்கெல்லாம் ஒருநாள் க‌ஷ்ட‌ப்ப‌டுவீங்க‌டா...ம‌ன‌நோயாளிக‌ளா....

   Delete
 5. I don't ,buy bribery teachers department ment only

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி