சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி - kalviseithi

Apr 22, 2022

சஸ்பெண்ட் CEO.,வுக்கு தலைமை அலுவலக பதவி

 

வினாத்தாள் 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' ஆன கல்வி அதிகாரிக்கு, புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

முதல் கட்ட தேர்வில், பிளஸ் 2வில், தமிழ் தவிர, மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள், வலைதளங்களில் கசிந்தன.திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ., அருள்செல்வம், உரிய முறைகளை பின்பற்றாமல், வினாத்தாள்களை பள்ளிகளுக்கு அனுப்பியதால், இந்த தவறு நடந்ததாக கூறப்பட்டது. 

பின் அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஒரு மாதம் கடந்த நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அவருக்கு, பள்ளிக் கல்வி துறை தலைமை அலுவலக வளாகத்தில், மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் - ஆசிரியர் கழக செயலராக பணியாற்றிய குணசேகரன், தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராகவும், தர்மபுரியில் பணியாற்றும் கணேஷ்மூர்த்தி, திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கமாக பொது தேர்வு ஏற்பாடுகள் துவங்கி விட்டால், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் இருக்காது. தற்போதைய பள்ளிக் கல்வி நிர்வாகம், இந்த மரபை மீறி, இந்த மாற்றத்தை செய்துள்ளது.

1 comment:

  1. ஏன்டா இது ஒரு செய்தியா அந்த CEO ஆளும் கட்சிக் வேண்டப்பட்டவனாக் கூட இருக்கலாம் ஆசிரியரா இருந்தா அல்வா கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி சுகர் வந்தே செத்துப் போய் விடுவான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி