சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 11, 2022

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

 

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று (ஏப்.,11) சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்க உள்ளது.


தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. இதில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை, உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.

ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற உள்ளது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்தை, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒரு மனதாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை; கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தராததை கண்டித்து, இன்றைய சட்டசபை கூட்டத்தில் கேள்விகளை எழுப்பவும், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணிக்கவும், அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்றைய சட்டசபை கூட்டம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 comments:

 1. ஆசிரியராக வரக்கூடிய நிங்க இப்படி பட்ட வார்த்தையை தவிர்க்கலாமே

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் / ஆசிரியைகள் பார்க்கக்கூடிய இணைய தளம், எனவே அட்மின் முதல் கமெண்ட்டை நீக்கவும். அந்த வாசகர் தரப்பில் நீக்க மெனு இல்லை என கருதுகிறேன்.

   Delete
 2. இன்று அறுத்து தள்ளப்படும்.
  இரண்டாம் செங்கோட்டையன் என நிருபிக்கப்படும்.
  செங்கோட்டையனே பரவாயில்லை என தோன்ற வைக்கப்படும். ஜி பி எஃப் கனவிலும் இரத்து செய்ய வாய்ப்பில்லை எனக்கூறி கொரோனா மீது பழிபோடப்படும். ஆக 5 ஆண்டு ஆட்சி முடிவதற்குள் ஏண்டா இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டோம் என ஒப்பாரி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

  ReplyDelete
 3. வழக்கம் போல் ஒன்னும் சொல்ல மாட்டாங்கள்

  ReplyDelete
 4. விரைவில் விரைவில் விரைவில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப but no action

  ReplyDelete
 5. தர‌ங்கெட்ட‌ வார்த்தைக‌ளைத் த‌விர்க்க‌வும்..

  சிபிஎஸ் குறித்து ஆய்வு செய்ய அமைக்க‌ப்ப‌ட்ட‌ குழுவின் அறிக்கையை ச‌ட்ட‌ச‌பையில் தாக்க‌ல் செய்ய‌ வேண்டும்..

  ஆசிரிய‌ர் காலிப் ப‌ணியிட‌ங்க‌ளை உட‌ன‌டியாக‌ நிர‌ப்ப‌ வேண்டும்..

  புதிதாக‌ தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியிட‌ங்க‌ளில் ப‌ணியாற்றும் ஆசிரியர்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ மாத‌ ச‌ம்ப‌ள‌த்தை உட‌ன‌டியாக‌ வ‌ழ‌ங்க‌ ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும்...

  ஈட்டிய‌ விடுப்பு ம‌ற்றும் ஊக்க‌ ஊதிய‌ உய‌ர்வு ஆகிய‌வ‌ற்றை உட‌ன‌டியாக‌ வ‌ழ‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்...

  இவைய‌னைத்தும் உங்க‌ளின் வாக்குறுதிகள் என்பதை நின‌வுப‌டுத்துகின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. அது பூரா கிசாந்த் பிசோர் ன்னு ஒரு பிகார் காரன் கொடுத்த பொய் வாக்குறுதிகள்... அத நம்பி ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள்...

   Delete
 6. நேற்று sunday full போதையில் இருந்து இருப்பாங்க, இன்னும் போதை தெளிந்து இருக்காது, இன்னைக்கு monday வா, ok, அந்த கோப்பையை கொடுங்க எதாவது சொல்லுவோம்

  ReplyDelete
 7. சம வேலைக்கு சம ஊதியம்.... கிடைக்குமா?......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி