Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - இளைஞர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு.
அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்ததிட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளை ஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 'தமிழ்நாடு முதல்வரின் fellowship என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு fellowship கல்வி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கெனவே இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' திட்டத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியிடத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.
மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்கள் உள்ளன.
அதேபோன்று fellows என்று புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் மாதம்தோறும் ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Web address
ReplyDeleteHere there is no website address how can we apply
ReplyDelete