😁ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையினரின் sincerity...
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை செய்பவர் ஒருவர் ஆறேழு மாசமா ஒரு டாக்டரிடம் வந்து போயிட்டு இருந்தாரு...!
டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டியை
பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா...
இந்த விசயம் டாக்டரின் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.,
டாக்டரோ .... "பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு
கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேனே தவிர..........
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணித் தரமாட்டேனு"
சொல்லிட்டாரு...
டாக்டர் பொண்ணுக்கோ.... தோஷம் ஒன்னு இருக்கு.....
அவளை யார் கல்யாணம் பண்ணினாலும் ஒரே மாசத்துல
செத்துடுவாங்க...
டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு
கல்யாணம் பண்ணி வைக்கிறாரு...!
அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்...!!
அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்...!
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்...!!
அடுத்ததா, ஒரு
வங்கி மேலாளருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த மேலாளரும் செத்து போயிடுறான்...!!
என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி
ஆகிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணி., சரி அந்த தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை செய்பவனுக்கே மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு முடிவு பண்ணி...
அவர் கால்ல விழுந்து, கெஞ்சி, கூத்தாடி
மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு...!
எல்லோரும் ஆசிரியர் வேலை பாா்ப்பவன் ஒரு மாசத்துல செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...!!
ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு,
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அவன் சாகவில்லை...!!!???
எல்லோருக்கும் பொிய ஆச்சரியம்...!
செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், வங்கி மேலாளர்
சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க...
அந்த பொண்ணு ஜாதகப்படி அவளை கட்டிகிட்டவன் ஒரே மாசத்துல செத்துருவான்னு தானே இருக்கு...!?
அதனாலதான் நாங்க எல்லோரும் இங்க இருக்கோம்...!?
ஆனால் அந்த ஆசிரியருக்கு ஒன்னும் ஆகவில்லையே எப்படி...!!!???
எமதா்மா, இது நியாயமா...
.
அதற்கு எமன் சொல்றாரு..........
டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல
வெயிட் பண்ணிட்டு இருப்பேன்,
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட்
பண்ணிட்டு இருப்பேன்..
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு
வந்துடுவேன்..
அதே மாதிரி வங்கியில வெயிட் பண்ணி மேலாளரை
பிடிச்சிட்டு வந்தேன்,
ஆனா........ இந்த ஆசிரியராக வேலை பாக்குற பயபுள்ள இருக்கே...!?
அய்யோ...அய்யோ ...
😭( எமனே அழறாரு)...
அவனோட ப்ளான்ல,சென்சஸ் பணி என போட்டிருந்தான்...
அதை நம்பி சென்சஸ் எடுக்கும் குடியிருப்புப்பகுதியில வெயிட் பண்ணிட்டு
இருந்தேன்.
ஆனா அந்தப் பயல்...திடீர் பயிற்சி என்று கணினி ஆய்வக மையம் உள்ள பள்ளிக்கு பயிற்சி எடுக்கப்போனதால
அவனப் பிடிக்க முடியல.....
அடுத்த நாள் Emis உள்ளீடு,பதிவிறக்கம் வேலைனு போட்டிருந்தாப்ல.....
நான் Computer center ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...
ஆனா அவன்.பிஇஓ அலுவலகத்தில் நலத்திட்ட பொருள்களை எடுக்கப் போய்ட்டான்யா.....
சரி சனிக்கிழமை பள்ளிக்கூடம் வெச்சுட்டாங்கல்லனு பள்ளிக்குப் போனா... கொரோனா தடுப்பூசி முகாம் பணினு போயிட்டாப்ல.
சரி இல்லம்தேடிக் கல்வித்திட்டத்தை பார்வையிடச் சென்றுள்ள இடத்திற்கு சென்றால் பிடிச்சுடலாம்னு போனா இல்லந்தேடிக் கல்விக்கு TLM தர்றாங்கனு வட்டாரவளமையம் போயிட்டார்னாங்க..
இன்று Smc பாஸ்புக் Entry போடப்போனார்னு தகவல் கேட்டுட்டு பேங்கிற்குப் போனா பராமரிப்பு மானிய பொருட்களை வாங்கப் போயிட்டார்னாங்க...
சரி Smc மறுகட்டமைப்புக்கூட்டத்திற்குப் போனால் பிடிச்சிடலாம்னு போனா 2 கட்டமா நடக்கிறதால அடுத்த வாரம் நடக்கும்னு சொல்லிட்டாங்க...
மாற்றுப்பணினு சொன்ன பள்ளிக்குப் போனா தேர்தல் பயிற்சி வகுப்புக்கு போயிட்டார்ங்கறாங்க...
இப்படியே, பல மாதங்கள் கடந்து விட்டன...இன்னும் இந்த கதை முடிய மாட்டேங்குது...அவனப் பிடிக்கிறதும் எனக்கே பெரும்பாடாக இருக்கிறது.......
டாக்டர், இன்ஜினியர்,மேலாளர் போல ஈசியா ஆசிரியரை
பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த எமனுக்கே எட்டு போட்டு அதோட நிக்காம, நூத்திபதினொன்னு(நாமம்) போட்டு காட்றான்யா...!?
😭எமனே
தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு.....
எமனை மட்டுமில்லை.,
எவனையும் சமாளிப்பான் இந்த பள்ளிக்கல்வித்துறையில ஆசிரியர் வேலை பாா்ப்பவன்....
அப்புறம்....... பள்ளிக்கல்வித்துறையில் வேலை பாா்க்கிறதுன்னா சும்மாவா......
பள்ளிக்கல்வித் துறையில் உயிர் மூச்சாக ஓய்வில்லாமல் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி தவிர்த்து மற்ற அனைத்து வேலைகளையும் பார்க்கும் ஆசிரியர்களுக்கு
இப்பதிவு சமர்ப்பணம் 🙏
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி