பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2022

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

 கடந்த அ தி மு க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால்  2012ல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, தையல், இசை முதலான எட்டுத் துறைகளில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக ₹5000 ஊதியத்தில்  பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று அரை நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். மேமாதம் பணியும், ஊதியமும் கிடையாது. மேலும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் எந்த சலுகையும் கிடையாது. நீண்ட இடைவெளிகளில் ₹ 7000,7700 என்ற சிறு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு, கடந்த வருடம் முதல் ₹10,000 மட்டுமே பெற்று வருகிறார்கள். இதிலும் வறுமை, மரணம், பணி பாதுகாப்பு இன்மை ஆகிய காரணங்களால் தற்போது 12,100 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த ஆட்சியில் நிரந்தரம் செய்ய முடியாது என்று மறுத்து வந்தனர்.

   இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்களாகியும் ' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்று மட்டுமே கூறி வருகிறது.

  தற்பொழுதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு  மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் பணிக் குறிப்பேடு, கொடை ஊதியம், பணி மாறுதல், விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு, தேர்தல் பணி போன்ற அனைத்துச் சலுகைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2022ல் மே மாதம் பள்ளி இருந்தும் ஊதியம் கிடையாது பணியும் கிடையாது என்று அறிவித்துள்ளது.

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும்  இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தொடர் புறக்கணிப்பினால் அனைவரும் மிகுந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 எனவே, பகுதிநேர ஆசிரியர்கள்  தங்கள் வாழ்வாதார உரிமையை மீட்க வரும் 05.05.2022 வியாழன் டிபிஐ வளாகம் சென்னையில் தமிழகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாகக் கூடி உச்சகட்டப் போராட்டமான மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.

 இதன் அடிப்படையிலாவது தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு பணி நிரந்தரம் செய்யுமா? என்று மிகுந்த ஏக்கத்துடன் வறுமையில் வாடும் பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

விடியல் அரசினால் விடியுமா?பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை...

 பொன். சங்கர்
 செய்தித் தொடர்பாளர்,
 திருப்பூர்.

39 comments:

  1. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எந்த அடிப்படையில் நீங்கள் வேலைக்கு போனீர்கள் seniority ஆ இல்ல தேர்வு எழுதியா ரெண்டும் இல்ல அப்போ fraud பண்ணி

      Delete
    2. Fraud - க்கான ஆதாரத்தை கொடுங்கள் சரியான முறையில் தான் வேலைக்கு சேர்ந்துள்ளோம். வீணாக பேசுவதை விட்டு விட்டு வேலையை பாரங்கள்

      Delete
    3. எந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தீர்கள் என்று சொல்ல சொன்னால் அதற்கு பதில் இல்லையே

      Delete
    4. 2011 அறிவிப்பும் இதற்கான அறிவிப்பு வெளியான போது இதற்கான விண்ணப்பம் வழங்கினார்கள் இது அரை நாள் வேலை தற்காலிக வேலை என எனது நண்பர்கள் விண்ணப்பம் கூட வாங்க வில்லை பின் 1:5 என்ற விகிதத்தில் எனக்கு நேர்முக தேர்வு நடந்தது. வேலை வாய்பில் பதிவு செய்து நேர் முக தேர்வினை எதிர்கொண்டேன் அப்போது எனது அருகில் எனது பதிவு மூப்பினை விட முன்னுரிமை பெற்ற நபரும் கலந்து கொண்டார் ஆனாலும் நேர்முக ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு அந்த சமயம் அவரால் விடையளிக்க இயலவில்லை பதிவு மூப்பு மட்டும் இங்கே தகுதி இல்லை நான் எனது கேள்விகான சரியான விடையை அளித்தேன் மேலும் கணினி பிரிவில் சிறப்பு பாடங்களை பயின்று அதற்கான சான்றும் அளித்தேன் என்னை தேர்வு செய்தால் கடிதம் வரும் என்றார்கள் கடிதம் பணி ஆணை பெற்று பணியில் சேர்ந்தேன் நான் பணியில் சேர்ந்த நாள் முதல் கணினி அறிவியல் பாட பிரிவிற்கு இன்று வரை தகுதி TET தேர்வு நடைபெறவில்லை PG TRB எழுதி அப்போது இருந்த சூழ்நிலையில் என்னால் 80 மதிப்பெண் பெற மட்டும் முடிந்தது எனது கட்ஆப் மதிப்பெண் மட்டும் எனது இட ஒதுக்கீட்டிற்கு போத வில்லை அதும் ஒரு முறை நடை பெற்ற தேர்வு மட்டுமே இது எனது விளக்கம் உங்களுக்கு புரியும் விதம் தமிழில் கூறியுள்ளேன். விண்ணப்பம் வழங்கிய போது அலட்சியமாக இருந்தவர்கள் தான் இப்போது இது பணம் பெற்று வாங்கிய பணியிடம் என்று கூறுகின்றார்கள். தயக்கம் பற்றி விளக்கம் வேண்டும் என்றால் நீல் ஆம்ஸ்ட்ராங் கதையினை படிக்கவும் அலட்சியமே காரணம் இது எனது கருத்து.

      Delete
    5. நீங்கள் முதுகலை ஆசிரியர் கணினி அறிவியல் ஆசிரியர் தேர்விற்கு மீண்டும் முயற்சிக்கவும்

      Delete
  2. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  3. 12100 பேரில் 50 வயது கடந்தவர் 50%

    ReplyDelete
    Replies
    1. Ellaam kasu koduthu ponavarkal thaane

      Delete
    2. Sir Neenga partheengala kasu Kuduthu ponatha? Proper Interview, 2 times certificate verification Ellam mudichu than velaiku eduthanga sir. Engalaku anaithu thaguthuyum undu. Theriyamal ethayum pesa Vendam. 10 Varuda vedhanai sir. Amaithiya Irunga plz.

      Delete
    3. Naan enna kaaranathukku koorinen enraal enga oorla thinamum kudikkum oruvan..Avanukku seniority um illai...Interview pass pannura alavukku avan worth illai athaan ketten...Neengal thavaraaga ninaikka vendam

      Delete
  4. Teachers are already working part time only

    ReplyDelete
  5. Onnume nadakkathu.... Tet pass pannavangalukke oru solution um sollala.... Entha oru exam um clear pannatha ungalukku enna panna poraan....?

    ReplyDelete
  6. mirthika coaching centre. tv malai. ug trb study materials available for tet paper 2 passed candidates.. ten books for ten units.. 2000 pages.. materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  7. போகும் போதே கைது செய்து விடுவார்கள் கவனமாக இருக்கவும்.... உங்கள் போராட்டத்தை கலைக்க பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்... உயிரை துச்சமென நினைத்து போராடினால் மட்டுமே போராட்டம் வெற்றி அடையும்....

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் உங்களுக்கு பணி கிடைக்க....

    ReplyDelete
  9. கோயம்பேடு எழும்பூர் போன்ற இடங்களிலே கைது செய்யப்படுவீர்கள்... ஒரு நாள் திருமண மண்டபங்களில் இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அதை தான் செய்ய முடியும் விடியல் அரசு

    ReplyDelete
  11. இது ஒரு பொழப்பு

    ReplyDelete
  12. Sir tet asiriyar Pola ematram adaiyatheer plan panni pannunga ellarum Thani thaniya vanga but Koyambedu ,central,Egmore la irangatheenga main group meg.podatheenga athu than nanga Panna thappu neengalum pannidatheenga all the best

    ReplyDelete
  13. மாதத்தில் 6 நாள் வேலை.. அதுவும் வெட்டியாக இருந்து விட்டு போக 10000 ஓவாய் பத்தாதா??

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வாரமும் மூன்று அரை நாள் மட்டுமே போக வேண்டும். நான்கு வாரமும் வாரத்தின் நடுவே மூன்று அரை நாட்கள் வேறு வேறு நாட்களில் பணி செய்ய வேண்டும். இந்தச் சிக்கலால் வேறு எங்கும் பணிக்குச் செல்ல முடியாது. 5ஆயிரத்தில் தொடங்கி பத்தாம் வருடத்தில் 10000 வாங்கி குடும்பம் நடத்திப் பார். அப்போது தெரியும் எங்கள் வலி. நானும் MA, Bed., TET 2013 முடித்து காத்திருக்கிறேன்.
      அது சரி உனக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? மிகவும் கீழ்மட்டத்தில் விமர்சனம்.

      Delete
    2. மாதத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றோம் என்று நீ வந்து பார்த்தியா, ஒவ்வொரு நாளும் நாங்கள் படும் இன்னல் எங்களுக்கு தான் தெரியும் நாங்கள் ஒன்றும் தகுதியற்றவர்கள் கிடையாது. வேண்டுமானால் ஒரு மாதம் வந்து எங்கள் வேலையை செய்து பாருங்கள் பிறகு தெரியும் எங்கள் வலியும் வேதனையும் .

      Delete
    3. எங்கள் பள்ளியில் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.. கொடுக்கும் எந்த வேலையும் உருப்படியாக செய்வது கிடையாது.. தேர்வு பணி போட்டால் போய் தூங்க வேண்டியது.. வர்ற 3 part time ல ரெண்டு ஒண்ணுக்கும் உருப்படாத வேலை தான்.. ஒரு மிஸ் மட்டும் தான் class எடுக்கறாங்க

      Delete
    4. 5000 Rs வேலைக்கு போனதே உங்கள் இயலாமை தான்.. நோகாமல் நொங்கு சாப்பிடுவோம், பின்பு ஏதோ ஒரு வகையில் அரசு நிரந்தர பணி வழங்கும் கனவில் உங்கள் வாழ்க்கையை 10 ஆண்டுகள் வீணடித்து விட்டீர்கள்.. தனியார் பள்ளியில் வேலை பார்த்து TET TRB என தேர்ச்சி பெற்று உள்ளோம். கஷ்டப்படாமல் ஏதும் கிடைக்காது..

      Delete
  14. நண்பர்களே யாரையும் கொச்சை படுத்தி பேசாதீங்க அவங்க வலி அவர்களுக்கு

    ReplyDelete
  15. பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் பற்றி நிரந்தரம் ஆகி விடுவார்கள் என்கிற பயம் தான் சிலரை இங்கே உளர் வைத்திருக்கிறது.
    நம் சொந்தங்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
    பகுதிநேர வேலை கிடைக்காதவர்கள் அல்லது வேலை கிடைத்தும் 5000 தானே சம்பளம் என நினைத்து வேலையில் சேராமல் தனியார் பள்ளியில் இதுவரை நல்ல ஊதியம் பெற்றவர்கள் நாம் நிரந்தரம் அடைய போகிறோம் என ஏதாவது எழுத குழப்பம் விளைவிக்க ஏதாவது செய்வார்கள்.
    போற்றுவார் போற்றட்டும்
    தூற்றுவார் தூற்றட்டும்.

    நம் இலக்கு நிரந்தரம்
    அதை அடையும் வழி போராட்டம்.
    மே 5
    டிபிஐ சென்னை.

    ReplyDelete

  16. பகுதிநேர பணியில் எட்டு துறை. இந்த எட்டு துறையில் உள்ள அசிரியர்கள் அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்களை தங்கள் துறையில் திறமையானவர்களாக மாற்ற அயராது பாடுபட்டு உள்ளோம்.
    இன்னும் அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரவும் அவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கவும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகிய எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி ஆசிரியப் பணியில் முழுமையாக ஈடுபட வைத்தால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை இன்னும் வளர்த்தெடுப்போம் என்பது உறுதி.
    இதே துறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்கு உண்டான அதே கல்வித்தகுதியை நாங்கள் அனைவரும் பெற்றிருக்கிறோம் என்பதையும் இத்தருணத்தில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் நன்றி

    ReplyDelete
  17. நாங்கள் படிக்காமலே நேர இந்த வேலைக்கு வந்தோம் எங்களுடைய தகுதியை பார்த்து அதற்குப் பிறகு நீங்கள் கூறவும் கடந்த பத்தாண்டு காலமாக வேறு எந்த வேலைக்கும் போகாமல் தொடர்ந்து பணி நேரம் கிடைக்கும் என்று தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உங்கள போல சில விஷக்கிருமிகள் உங்களுக்கு எப்படி நிரந்தரம் போடுவார்கள் என்று கேட்கிறீர்கள் நீ படித்துவிட்டு வந்தீர்களா அல்லது நேரடியாக கடவுள்கள் உங்களை பூமிக்குக் கொண்டு வந்தார்களா அறிவுஜீவிகள் இதற்கு பதில் கூறவும்

    ReplyDelete
  18. 5000 ரூபாய்க்கு வேலைக்கு போனது எங்களுடைய இயலாமல் கிடையாது எங்களை ஆட்சிபுரிந்த அரசியல் கட்சிகள் உடைய இயலாமை மற்றும் எங்களை குறை கூறுவது உன்னுடைய இயலாமை ராஜ் ஐயா

    ReplyDelete
  19. As per NCET ACT and Supreme court orders , recruitment should be proper

    ReplyDelete
  20. Any way present condition pass of any new law in tamilnadu is very difficult

    ReplyDelete
  21. We know that 2013 TET passed affected due to NCET ACT only.NCET says TET is only for eligibility test not for employment.Teachers recruitment by TET+ TEST or TET+Employment seniority .Other option nothing

    ReplyDelete
  22. Our present law never permits direct observation of any postings

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி