CPS ரத்து - வல்லுந‌ர் குழு அறிக்கையின் படி விரைவில் அரசாணை ??? - அரசு செயலாளர் கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2022

CPS ரத்து - வல்லுந‌ர் குழு அறிக்கையின் படி விரைவில் அரசாணை ??? - அரசு செயலாளர் கடிதம்.

 


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தகவல் தெரிவிக்கப்படுகின்றது.


01.04.2003 அன்றோ . அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட ' வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்று அரசு சார்பு செயலாளர் அரசு ஊழியர் சங்கங்களுக்கு பதில் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. விரைவில் என‌ க‌டிதத்தில் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை...க‌ல்விச் செய்திக்கு ஏன் இந்த‌ க‌ரிச‌ன‌ம்..?..
    விரைவில் என‌க் குறிப்பிட்டாலே என்ன‌ பொருள் என அனைவ‌ருக்கும் தெரியும்...
    ஆய்வுக்குழுவின் அறிக்கையை பொதுவெளியில் ச‌ம‌ர்ப்பிப்ப‌தில் த‌மிழ‌க‌ அர‌சுக்கு என்ன‌ த‌ய‌க்க‌ம்?..

    ஊக்க‌ ஊதிய‌ உய‌ர்வு ர‌த்து,ஈட்டிய‌ விடுப்பு ஒப்ப‌டைப்பு ர‌த்து,புதிய‌ ப‌ணியிட‌ங்க‌ளில் ப‌ணியாற்றும் ஆசிரிய‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் ஆகிய‌ சாதார‌ண‌ கோரிக்கைக‌ளைக் கூட‌ இந்த‌ அர‌சு வ‌ழ‌ங்காம‌ல் ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் அரசூழிய‌ர்க‌ளை இந்த‌ அர‌சு வ‌ஞ்சிக்கின்ற‌து..

    முத‌ல்வ‌ர் ஸ்டாலின் த‌லைமையிலான‌
    தி.மு.க‌ அர‌சு தொட‌ர்ந்து அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் உட்ப‌ட‌ த‌ன‌து வ‌லிமையான‌ ஆத‌ர‌வு த‌ள‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து..இதே நிலை தொட‌ருமேயானால் ஓரிரு ஆண்டுக‌ளில் இந்த‌ ஆட்சி முடிவுக்கு வ‌ருவ‌து உறுதி...

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு சகோ

      Delete
    2. கடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

      Delete
  2. விரைவில் என‌ க‌டிதத்தில் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை...க‌ல்விச் செய்திக்கு ஏன் இந்த‌ க‌ரிச‌ன‌ம்..?..
    விரைவில் என‌க் குறிப்பிட்டாலே என்ன‌ பொருள் என அனைவ‌ருக்கும் தெரியும்...
    ஆய்வுக்குழுவின் அறிக்கையை பொதுவெளியில் ச‌ம‌ர்ப்பிப்ப‌தில் த‌மிழ‌க‌ அர‌சுக்கு என்ன‌ த‌ய‌க்க‌ம்?..

    ஊக்க‌ ஊதிய‌ உய‌ர்வு ,ஈட்டிய‌ விடுப்பு ஒப்ப‌டைப்பு ,புதிய‌ ப‌ணியிட‌ங்க‌ளில் ப‌ணியாற்றும் ஆசிரிய‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் ஆகிய‌ சாதார‌ண‌ கோரிக்கைக‌ளைக் கூட‌ இந்த‌ அர‌சு வ‌ழ‌ங்காம‌ல் ஆசிரிய‌ர்க‌ள் ம‌ற்றும் அரசூழிய‌ர்க‌ளை இந்த‌ அர‌சு வ‌ஞ்சிக்கின்ற‌து..

    முத‌ல்வ‌ர் ஸ்டாலின் த‌லைமையிலான‌
    தி.மு.க‌ அர‌சு தொட‌ர்ந்து அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் உட்ப‌ட‌ த‌ன‌து வ‌லிமையான‌ ஆத‌ர‌வு த‌ள‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து..இதே நிலை தொட‌ருமேயானால் ஓரிரு ஆண்டுக‌ளில் இந்த‌ ஆட்சி முடிவுக்கு வ‌ருவ‌து உறுதி...

    ReplyDelete
  3. TET விண்ணப்பம் போட வாய்ப்பு கொடுக்கவேண்டும்

    ReplyDelete
  4. அரசு ஊழியர்கள் போராட்டம் என்று கல்விசெய்தியில் வந்த உடனே தமிழக அரசு cps வல்லுநர் குழு அறிக்கையை அதுவும் கல்விசெய்திலே வெளியிடு பண்ணிட்டாங்க,

    ReplyDelete
  5. அய்யா, தொடக்க கல்வி துறை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த,அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுங்கள்....விரைவில் மாவட்ட மாறுதல் நடைபெற வில்லையெனில் தென் மாவட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மறைந்து விட போகிறது...அடுத்த கல்வி ஆண்டு வந்தால் எங்கள் பிள்ளைகளை தாயிடம் விடுவதா அல்லது தந்தை பணிபுரியும் இடத்தில் விடுவதா என பல கேள்விகள் உள்ளது...அரசு நினைத்தால் எவ்வித வழக்கையும் விரைந்து முடிக்கலாம்....காலம் தாழ்துவது எதனால்.....இந்த பிரசைக்கு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்குமா?

    ReplyDelete
  6. நரேந்திர மோடி தனது மத்திய அரசு ஊழியர்களிடம் கனிவோடு ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுகிறார்.. ஆனால் இங்கு பொய் வாக்குறுதியும் விளம்பரமும் நடக்கிறது..

    ReplyDelete
  7. விரைவில் என்பது 2026 பிப்ரவரி 13 வரையும்?

    ReplyDelete
  8. அதிமுக கட்சிக்கு ஏற்பட்ட நிலை திமுக கட்சிக்கும் ஏற்படணும் விதி இருந்தால் அதை மட்டும் யாராலும் தடுக்க முடியாது. காலம் தான் பதில் சொல்லும்.

    ReplyDelete
  9. கடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி