குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்களே அவகாசமாக உள்ளன. கடைசி நேர இணையதள நெரிசல் சிரமங்களை கருத்தில் கொண்டு, இப்போதே விண்ணப்பிக்க வேண்டுமென தோ்வா்களை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
குரூப் 4 தோ்வு, கரோனா பாதிப்புக்குப் பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட மொத்தமாக 7 ஆயிரத்து 138 காலிப்
பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசி நாளாகும். அதாவது 11 நாள்களே எஞ்சியுள்ளன. எழுத்துத் தோ்வானது ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறுகிறது.
தோ்வா்கள் ஆா்வம்: குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க தோ்வா்கள் அதிகளவு ஆா்வம் காட்டி வருகின்றனா். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா். இணையதளம் வாயிலாக எந்த நேரமும் விண்ணப்பம் செய்யலாம் என்பதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கணித்துள்ளது.
புதிய மாவட்டங்கள்: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அடங்கியுள்ள தாலுகாக்களை தோ்வு மையங்களாக தோ்வாணையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 வட்டங்களும், மயிலாடுதுறை, திருப்பத்தூரில் குறைந்தபட்சமாக 4 வட்டங்களும் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் தான் பகுதி நேர ஆசிரியர்கள், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் எதிர் பார்த்த மற்றும் டெட் பாஸ் செய்தவர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் கொடுத்து ஏமாற்றிவருகிறதே என்று இந்த அரசு அமைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த அனைவருக்கும் அதே நிலை. ஐயா ஸ்டாலின் அவர்கள் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteMIRTHIKA COACHING CENTRE. TIRUVANNAMALAI. UG TRB(ENGLISH) STUDY MATERIALS AVAILABLE FOR PAPER II PASSED CANDIDATES... Materials will be sent by courier.. ten books for ten units around 2000 pages... contact:7010520979
ReplyDelete