தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 19, 2022

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், இம்மாத இறுதி வரை நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் திருத்தவுள்ளனர். 


மேலும், ஆசிரியர்கள் பயிற்சி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்றவை நடைபெறுவதால், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. ENGLISH STUDY MATERIALS AVAILABLE FOR TET PAPER 2 PASSED CANDIDATES.. 10 BOOKS FOR 10 UNITS ..2000 PAGES... MATERIALS WILL BE SENT BY COURIER.. 1200 QUESTIONS FREE... CONTACT 7010520979...

    ReplyDelete
  2. பள்ளி திறந்து பிள்ளைகள் கல்வி கற்றக்கொள்ள வேண்டும்.(இசை,ஓவியம், விளையாட்டு,தையல்,)ஆகிய கலைகளிலும் தன் திறனை வளர்த்துக்கொள்ள.இதற்கும் முழு இடம் தர வேண்டும்.திமுக வெற்றி பெற்று ஓராண்டு காலம் ஆகியும். முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதும் போல் 10 வருட காலம் கடந்த பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ததால் முடியும்.🙄🙄🙄😔😔😷😷

    ReplyDelete
  3. செய்தால்தான் முடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி