சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2022

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.



சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 68277/ இ/ இ1/ 2021, நாள்: 02-05-2022.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை கண்டறியும் பொருட்டு பள்ளி திறக்கும் போது மாணவ / மாணவியரின் உடல் நிலை குறியீட்டின் படி ( BMI - Body Mass Index ) கணக்கீடுக்களை மேற்கொள்ளுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்துவதுடன் உடல் நிலை குறியீட்டின் படி சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து பிரச்சினைகளை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்பணியின் முக்கிய நோக்கம் ஆகும்.


 எனவே , மேற்காண் பொருள் தொடர்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . " சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் தரவுகளை TN - EMIS இல் நாள்தோறும் உள்ளீடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Enter the details of the students benefiting under the Noon-meals Nutrition Program on a daily basis on the TN EMIS site


Proceedings of the Joint Director - Download here...

3 comments:

  1. எமிஸ் நான் இப்ப கூகுளே இல்லையே

    ReplyDelete
  2. இது CEO வந்து என்ட்ரி போடப்போறது இல்லை. ஆக ஆக ஆக... இந்த வேலையையும் ஆசிரியர்களின் தலையில் தான் கட்டுவார்கள். அடுத்ததாக மாணவர்கள் எத்தனை மணிக்கு தூங்கினான்? , எப்போது எழுந்தான்? காலையில் பல்லு வெளக்குனாங்களா, இல்லையா? கக்கூஸ் வந்துச்சா இல்லையா? அவுங்க வீட்டில் பெற்றோர்கள் சண்டையில்லாமல் இருந்தார்களா இல்லையா? தகப்பனார் சாராயம் குடிச்சாரா இல்லையா? வீட்டில் அம்மா டீவி சீரியல் பார்த்தாங்களா இல்லையா?
    என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கி இம்சையில் என்ட்ரி போடப்போறதும் ஆசிரியர்களின் வேலையாக வரப்போகிறது. மொத்தத்தில் அரசு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும் நேரம் கிடைக்கப் போவதில்லை.

    ReplyDelete
  3. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates...10 books for 10 units...1000 question free... materials will be sent by courier.. contact7010520979...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி