அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
குழந்தைகளின் ஆங்கில வாசிப்பை குதூகல அனுபவமாக்க Read Along மூலம் கூகுள் Google நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை இணைகிறது.
அனைத்து மாணவர்களுக்கும் விழுமக்கல்வி என்ற ஒன்றை ஏற்படுத்துங்கள். அதற்கான மதிப்பீட்டு முறைகளும் உருவாகட்டும். தனியார்ப் பள்ளி , அரசுப்பள்ளி என்கிற பாகுபாடு இல்லாமல் அந்தந்தப் பாட ஆசிரியரே அந்தப் பாடங்களுக்கு மாணவர்களுக்கான ஒழுக்க மதிப்பெண்களை வழங்க வேண்டும். சரியான மதிப்பெண் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நியமியுங்கள்.
ReplyDelete