ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு - kalviseithi

Jun 2, 2022

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை திடீரென குறைக்கப்பட்டு, வரும், 6ம் தேதி முதல் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், மே 13ல் முடிந்தன. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன் 12 வரை கோடை விடுமுறை.

இந்நிலையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி திறந்த பின் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

8 comments:

  1. ஆமா... பள்ளி திறந்த பின் பயிற்சி நடத்தினால் மாணவர்களை பள்ளியில் யார் பார்த்து கொள்வார்கள்....

    ReplyDelete
  2. சரியான முடிவு. வரவேற்ப்போம்

    ReplyDelete
  3. IAS Brains அப்படித்தான் யோசிக்கும்

    ReplyDelete
  4. தொடக்க கல்வி துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த வலியுறுத்த வேண்டுகிறேன் இன்றைய இயக்குனர் சந்திப்பில்..... தொடக்கப் பள்ளி சங்கங்களே

    ReplyDelete
  5. இந்த மாதம் ஆசிரியர் நியமனம் இருக்கும்

    ReplyDelete
  6. இன்று நடந்து முடிந்த சங்கங்கள் ஆலோசனைக் கூட்ட ம் பற்றிய தகவலை தெரியப் படுத்துங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி