பள்ளிக் கல்வி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணி நிரந்தரம் - SPD Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

பள்ளிக் கல்வி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணி நிரந்தரம் - SPD Proceedings


பள்ளிக் கல்வி துறையின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய விவரங்கள் கோரியது சார்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். 



மாற்றுத் திறனாளி இயக்குநரின் கடிதத்தில் அரசாணை நிலை எண் 151 , சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் ( சந 4 ) த் துறை நாள் 16.10.2008 ன்படி தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிவரன்முறைப்படுத்திட கோரும் கோரிக்கை குறித்து 08.04.2022 அன்று மாண்புமிகு ( ச.ந. ( ம ) ம.உ . ) துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தொகுப்பூதியத்தில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத் திறனாளி விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து வகை பணியிடங்களிலும் தற்போது பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள் விவரங்களை கீழ்க்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 24.06.2022 - க்குள் மின்னஞ்சல் மூலம் தவறாது அனுப்பி வைக்குமாறு அனைத்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் இரண்டையும் விட்டு வைத்துள்ளீர்கள் ஏதாவது ஞாபகம் இருக்கிறதா. தயவுசெய்து இதை அறிவியுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி