வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை , வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்தது இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் -3 அவர்களால் 6,6.2022 தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது . மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை வழங்கப்பட வேண்டும் . மேலும் நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in " -ல் அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள் , கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை " இ சேவை " வாயிலாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திகொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச் செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jul 9, 2022
Home
EMPLOYMENT
வேலைவாய்ப்பு இணையதளத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியை, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது என அறிவிப்பு!
வேலைவாய்ப்பு இணையதளத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியை, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது என அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி