2 லட்சம் இல்லம் தேடி கல்வி மையம் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2022

2 லட்சம் இல்லம் தேடி கல்வி மையம் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில், இரண்டு லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் திறக்கப்படாத காலத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதித்ததோடு, கற்றல் இடைவெளி ஏற்பட்டது.இதை சரி செய்ய, தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' திட்டம், 2021 அக்டோபரில் துவக்கப்பட்டது.

அதன் இரண்டு லட்சமாவது மையத்தை, திருவண்ணாமலை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான காணொலி யையும், புகைப்பட விளக்க புத்தகத்தையும் வெளியிட்டார்.கடந்த ஜூன் 1 முதல் 12 வரை, இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 'ரீடிங் மாரத்தான்' என்ற தொடர் வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது.

திருச்சி லால்குடி வட்டாரம் முதலிடம், மதுரை அலங்காநல்லுார் வட்டாரம் இரண்டாம் இடம், மதுரை மேலுார் மூன்றாம் இடம் பிடித்தது.மேலும், சிறந்த தன்னார்வலர்களுக்கான தேர்வில், மதுரை மாவட்டம், சிறந்த மாணவர்களுக்கான தேர்வில், திருப்பத்துார் மாவட்டமும் வென்றது. இவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பரிசு கோப்பைகளை வழங்கினார். 

இதில் அமைச்சர்கள் வேலு, செஞ்சி மஸ்தான், மகேஷ், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, மாவட்ட எல்லையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆராஞ்சி கிராமத்திற்கு செல்லும் வழியில், முதல்வர் ஸ்டாலின் சோமாசிபாடி புதுாருக்கு சென்றார், அங்கு டிரைவர் ஏழுமலை - தமிழரசி தம்பதி யின் மகன் சிவானந்தம், 14, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி.அவர் வீட்டிற்கு சென்ற மாற்றுத்திறனாளி சிவானந்தத்தை சந்தித்து, உடல் நலம் விசாரித்து, சக்கர நாற்காலி வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி