4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2022

4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

 

தஞ்சை மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21,513 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிரிழப்பு இல்லை.


தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. நீங்க சுகாதார துறை அமைச்சர்... எங்களுக்கும் தான் ஒருத்தன் இருக்கானே.... விரைவில் விரைவில் விரைவில்....................

    ReplyDelete
  2. விரைவில் விரைவில் என்று செங்கோட்டை பரவாயில்லை. அதிமுக ஆட்சியில் செய்த பாவங்களை அப்படியே செய்து வருகிறீர்கள். தகுதித் தேர்வு எழுதி மறுபடியும் தேர்வு. இன்னமும் எத்தனை தேர்வு தான் வைப்பீர்கள். தகுதி இருந்தும் வயது அதிகமாக உள்ளவர்கள் குடும்பம் குழந்தைகளை கவனிப்பார்களா? தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? விடியல் கிடைக்கும் என்று ஓட்டு பலரிடம் கெஞ்சி போடவைத்தவர்களின் தலைகளில் மண் அள்ளி போடும் நிலையாக உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் மோசமான நிலையில் உள்ளது. கல்வித்துறை. இனியாவது விடியல் கிடைக்குமா???? இவ்வாறு எழும் குரல்கள் முதல்வர் அவர்களின் காதில் விழவில்லையா? இல்லை இதுதான் அவர்கள் எடுத்துள்ள முடிவா? மாண்புமிகு கலைஞர் ஐயா அவர்கள் எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார். ஆனால் இப்போது????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி